ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Monday, June 25, 2012

நம்பினால் நம்புங்கள் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
நானும் ஆழ்வாராக வேண்டும் !
 
 
நம்மாழ்வார் போல்
16 வருஷம் தவம் செய்யவேண்டும் !
 
 
மதுரகவியார் போல்
குரு கைங்கர்யம் செய்யவேண்டும் !
 
 
பொய்கையாழ்வார் போல
பெரிய விளக்கு ஏற்றவேண்டும் !
 
 
பூதத்தாழ்வார் போல்
அன்பைப் பொழிய வேண்டும் !
 
 
பேயாழ்வார் போல்
திருவின் மணாளனைக் காணவேண்டும் !
 
 
திருமழிசையாழ்வார் போல்
பெருமாளை எழுப்ப வேண்டும் !
 
 
குலசேகர ஆழ்வாரைப் போல்
எல்லாவற்றையும் துறக்கவேண்டும் !


பெரியாழ்வாரைப் போல்
பத்மநாபனுக்கு பல்லாண்டு பாட வேண்டும் !


ஆண்டாளைப் போல்
என் அரங்கனின் மனைவியாகவேண்டும் !


திருப்பாணாழ்வாரைப் போல்
ஒதுங்கி ஒரு பக்தி செய்யவேண்டும் !


தொண்டரடிப்பொடியாழ்வார் போல்
திருந்தி பக்தி செய்யவேண்டும் !


திருமங்கையாழ்வாரைப் போல்
வாளால் நாராயணனை மிரட்ட வேண்டும் !


இது சாத்தியமா ?


சத்தியமாய் இது சாத்தியமில்லை . . .


நான் என் பலத்தை நம்பினால் . . .
சத்தியமாய் இது சாத்தியமில்லை . . .

நான் க்ருஷ்ணனை நம்பினால் . . .
சத்தியமாய் இது சாத்தியமில்லை . . .


ஆனால் அடியேன் நம்புவதோ
காரேய் கருணை ராமானுசனை . . .


அதனால் இது சத்தியமாய் சாத்தியம் . . .நானும் ஆழ்வாராவேன் . . .

ராமானுஜனை நம்பினால் மோக்ஷம் !
ராமானுஜனை நம்பினால் பாவம் அழியும் !
ராமானுஜனை நம்பினால் எதுவும் நடக்கும் !


ராமானுஜனை நம்பினால்
நானும் ஆழ்வார்தான் . . .
நீயும் ஆழ்வார்தான் . . .


நம்பினால் நம்புங்கள் . . .0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP