அப்பாடா . . .நிம்மதி . . .
ராதேக்ருஷ்ணா
எனக்குக் காமம் அதிகம் !
எனக்குக் கோபம் அதிகம் !
எனக்கு அஹம்பாவம் அதிகம் !
எனக்கு சுயநலம் அதிகம் !
எனக்குப் பெருமை அதிகம் !
எனக்குத் திமிர் அதிகம் !
எனக்கு பொறாமை அதிகம் !
எனக்கு வெறுப்பு அதிகம் !
எனக்கு பேராசை அதிகம் !
எனக்கு பொறுமை கிடையாது !
எனக்கு பணிவு கிடையாது !
எனக்கு சிரத்தை கிடையாது !
எனக்குப் பொறுப்பு கிடையாது !
எனக்கு சோம்பேறித்தனம் பிடிக்கும் !
எனக்கு வெட்டியாயிருக்கப் பிடிக்கும் !
எனக்கு அடுத்தவரை குறைகூறப் பிடிக்கும் !
எனக்கு எல்லோரும் என்னைக்
கொண்டாடுவது ரொம்பப் பிடிக்கும் !
என்னை யாராவது குறை சொன்னால்
எனக்குப் பிடிக்கவே பிடிக்காது !
நான் உடலை வருத்தியெல்லாம்
பக்தி செய்யமாட்டேன் . . .
என் மனம் க்ருஷ்ணனை நினைத்து
கதறியெல்லாம் அழாது . . .
என் புத்தி க்ருஷ்ணனுக்காக
மட்டுமே வாழாது . . .
எப்பொழுதும் க்ருஷ்ண
நாமத்தை ஜபிக்க ஆசை கிடையாது . . .
நான் இத்தனை மோசமானவன் . . .
ஆனாலும் க்ருஷ்ணன் என்னை
கைவிடவில்லை . . .
அவனுடைய நாமத்தை
எப்படியோ என்னை ஜபிக்கவைத்துவிட்டான் !
மறந்துபோய் பல சந்தர்ப்பத்தில்
க்ருஷ்ணா என்று என்னை அழைக்க
வைத்துவிட்டான் !
க்ருஷ்ணன் தன்னுடைய
கோயிலுக்கு என்னை அழைத்துச்
செல்கிறான் !
எனக்கே தெரியாமல் க்ருஷ்ணன்
என்னை அவனை நம்பவைத்துவிட்டான் !
இதுதான் ஆச்சரியம் . . .
இதுதான் அதிசயம் . . .
நான் எப்பொழுதாவது
சொல்லும் க்ருஷ்ண நாமத்திற்கு
எனக்கு அத்தனை செய்துகொண்டிருக்கிறான் !
நான் அவனை மறந்தேபோனாலும்,
அவன் என்னை மறப்பதேயில்லை . . .
ஆஹா . . .
இதல்லவா உண்மையான அன்பு . . .
ஆஹா . . .
இதுதானே உண்மையான காதல் . . .
நான் க்ருஷ்ணன் பின்னால்
செல்வதில்லை . . .
ஆனால் க்ருஷ்ணன் என் பின்னால்
அலைந்துகொண்டேயிருக்கிறான் . . .
என் ஒருவனைத் திருத்த
எத்தனை பாடு படுகிறான் . . .
நான் நல்வழியில் செல்ல
எத்தனை கருணை காட்டுகிறான் . . .
ஒன்று எனக்கு நன்றாகப் புரிந்தது . . .
க்ருஷ்ணன் என்னைவிட பலசாலி . . .
க்ருஷ்ணன் என்னைவிட உத்தமன் . . .
க்ருஷ்ணன் என்னைவிட புத்திசாலி . . .
க்ருஷ்ணன் என்னைவிட உயர்ந்தவன் . . .
க்ருஷ்ணன் என்னைவிட அற்புதமானவன் . . .
க்ருஷ்ணா ! உன் பலம் புரிந்தது . . .
அதனால் இனிமேல் கவலையில்லை !
என்னைப் பற்றி இனிமேல் கவலையில்லை !
நீ என்னைக் கவனித்துக்கொள்வாய் !
அப்பாடா . . .நிம்மதி . . .
நான் எப்படியிருந்தாலும்
என்னை சரிசெய்யும் ஒருத்தரைத் தான்
இத்தனை நாள் தேடினேன் . . .
இனியெல்லாம் சுகமே . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக