யாரை நம்பி . . .
ராதேக்ருஷ்ணா
யாரை நம்பி யார்
பிறந்தார் ?
யாரை நம்பி யார்
வளர்ந்தார் ?
யாரை நம்பி யார்
வாழ்கின்றார் ?
யாரை நம்பி யார்
தூங்குகின்றார் ?
யாரை நம்பி யார்
சாப்பிடுகின்றார் ?
யாரை நம்பி யார்
வேலைக்குச் செல்கின்றார் ?
யாரை நம்பி யார்
சேமிக்கின்றார் ?
யாரை நம்பி யார்
வீடு கட்டுகிறார் ?
யாரை நம்பி யார்
கல்யாணம் செய்கின்றார் ?
யாரை நம்பி யார்
குழந்தை பெறுகின்றனர் ?
யாரை நம்பி யார்
குழந்தையை வளர்கின்றார் ?
யாரை நம்பி யார்
கண் விழிக்கின்றார் ?
யாரை நம்பி யார்
திட்டமிடுகின்றார் ?
யாரை நம்பி யார்
குறை சொல்கிறார் ?
யாரை நம்பி யார்
பக்தி செய்கின்றார் ?
யாரை நம்பி யார்
கடவுளை நம்புகின்றார் ?
யாரை நம்பி இந்த உலகம்
செல்கிறது ?
யாரை நம்பி இந்த மிருகங்கள்
வாழ்கின்றன ?
யாரை நம்பி இந்தப் பறவைகள்
வானில் பறக்கின்றன ?
யாரை நம்பி இந்தப் பூச்சிகள்
அலைகின்றன ?
யாரை நம்பி இந்த மரம்,செடிகள்
வளர்கின்றன ?
யாரை நம்பி இந்த பூமி
சுற்றிக்கொண்டிருக்கிறது ?
யாரை நம்பி இந்தச் சூரியன்
வெளிச்சம் தருகின்றது ?
யாரை நம்பி இந்த நக்ஷத்திரங்கள்
பிரகாசிக்கின்றன ?
யாரை நம்பி இந்தக் கண்கள்
பார்க்கின்றன ?
யாரை நம்பி இந்தக் காதுகள்
கேட்கின்றன ?
யாரை நம்பி இந்த வாய்
பேசுகின்றது ?
யாரை நம்பி இந்தக் கைகள்
வேலை செய்கின்றன ?
யாரை நம்பி இந்தக் கால்கள்
நடக்கின்றன ?
யாரை நம்பி இந்த மூச்சு
உள்ளும் வெளியும் செல்கிறது ?
யாரை நம்பி நாம் எங்கே செல்கிறோம் ? ? ?
கண்டுபிடி . . .
உன் நம்பிக்கையைக் கவனி . . .
உன் நம்பிக்கையைப் பலப்படுத்து . . .
உன் நம்பிக்கையை சோதனை செய் . . .
உன் நம்பிக்கையை தீர்மானி . . .
என் நம்பிக்கை க்ருஷ்ணன் . . .
என் நம்பிக்கை நாமஜபம் . . .
என் நம்பிக்கை சரணாகதி . . .
இப்பொழுது உன் நம்பிக்கையை நீ சொல் . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக