தெய்வத்தின் காடாம் !
ராதேக்ருஷ்ணா
திவாகர முநியை இழுத்த காடாம் !
கிருஷ்ணன் தானே ஆசைப்பட்டு ஓடிவந்த காடாம் !
புலையஸ்த்ரீ காட்டிக்கொடுத்தக் காடாம் !
இலுப்பை மரப் பொந்தில் தெய்வம் தெரிந்த காடாம் !
18மைல் தூரம் தெய்வம் படுத்த காடாம் !
பக்தனுக்காகத் தன்னைச் சுருக்கின தெய்வத்தின் காடாம் !
பில்வமங்களத்து ரிஷியை வசீகரித்த காடாம் !
தேங்காய் சிரட்டையில் நெய்வேத்தியம் தரும் காடாம் !
உப்பு மாங்காயை ரசிக்கும் தேவாதிதேவனின் காடாம் !
12008 சாளக்ராமங்களின் சங்கமக் காடாம் !
தீராத நோய் எல்லாம் தீர்க்கும் காடாம் !
வினைகளிலிருந்து காக்கும் காடாம் !
ஸ்வாமி நம்மாழ்வாருக்கு பிடித்த காடாம் !
நித்தம் ஸ்ரீவேலி நடக்கும் காடாம் !
அசுரரை வேட்டையாடும் அரசனின் காடாம் !
ஆராட்டை அனுபவிக்கும் காடாம் !
லக்ஷ தீபத்தில் ஜொலிக்கும் காடாம் !
ஆளவந்தாரை அசர வைத்த காடாம் !
ஸ்வாமி ராமானுஜரை திகைக்கவைத்த காடாம் !
சங்குமுகத்தை எல்லையாகக் கொண்ட காடாம் !
ஸ்வாதித் திருநாளும் தன்னை அர்ப்பணித்த காடாம் !
வாழைப்பழமும் ராமகதையைத் தரும் காடாம் !
பழத்தின் தோலும் மஹாபாரதப் பாட்டைத் தரும் காடாம் !
ஒற்றைக்கல்லில் தரிசனம் செய்யவைக்கும் காடாம் !
மூன்று வாசலில் முதல்வனைக் தரிசிக்கும் காடாம் !
அற்புத சிங்கமும் ராமாயணம் கேட்கும் காடாம் !
பொய்யனும் பெண் வேஷமிடும் காடாம் !
ப்ரியதர்ஷினிக்கு மிகவும் பிடித்த காடாம் !
பிள்ளைகள் மணலில் ரமிக்கும் காடாம் !
பத்மதீர்த்த கரையில் இருக்கும் காடாம் !
பேயையும் கட்டி வைக்கும் காடாம் !
போத்திகளின் புகலிடமான காடாம் !
தமரைத் தாங்கும் தாமரையாளின் காடாம் !
தாமரைக் கையனின் தனிப்பெரும் காடாம் !
சிவனும் ஒதுங்கின காடாம் !
பிரமனும் தவமிருக்கும் காடாம் !
தேவர்களும் காத்திருக்கும் காடாம் !
பாகவத சப்தத்தில் திளைக்கும் காடாம் !
ராமாயண சப்தத்தில் ரமிக்கும் காடாம் !
வந்தாருக்கு சோறு போடும் காடாம் !
நாலு வேதமும் எதிரொலிக்கும் காடாம் !
நல்லவர்களைக் காப்பாற்றும் காடாம் !
நல்லவென்னவெல்லாம் தரும் காடாம் !
கதியற்றவருக்கு கதியான காடாம் !
நிதிக்கு குறைவில்லா காடாம் !
சரஸ்வதியும் கொலுவிருக்கும் காடாம் !
குமரனும் மாமனைத் தேடி வரும் காடாம் !
வெள்ளையனும் தொழுத காடாம் !
இந்திரனும் வாஹனம் தாங்கும் காடாம் !
குரங்குக்கும் வெண்ணை பிடிக்கும் காடாம் !
ராஜனையும் தாசனாக்கும் ராஜாதிராஜனின் காடாம் !
கோடி கோடியாய் புதையல் கிடைக்கும் காடாம் !
ஆயிரம் தலை பாம்பு காவல் காக்கும் காடாம் !
அனைவரையும் அசத்தும் காடாம் !
இன்று உலகே அசந்து பார்க்கும் காடாம் !
என் மன்னவனின் காடாம் !
என் காதலனின் காடாம் !
என் நாயகனின் காடாம் !
என்னை அடிமையாக்கிய காடாம் !
என்னால் மறக்கமுடியாத காடாம் !
என் வம்சமே கைங்கர்யத்திற்கு ஏங்கும் காடாம் !
என் குலதெய்வத்தின் காடாம் !
மலை நாட்டின் தலைக் காடாம் !
கடவுளின் சொந்தக் காடாம் !
அழகன் பத்மநாபனின் அனந்தன் காடாம் !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக