வெளிவேஷம் . . .
ராதேக்ருஷ்ணா
பாரதியே வா . . .
மீண்டும் ஒரு முறை
வீரமாகப் பாடு . . .
காந்தியே வாரும். . .
இன்னொரு சத்தியாக்ரஹத்தை
தொடங்கும் . . .
சுபாஷ் சந்திர போஸே வாரும் . . .
ரத்தம் தருகிறோம் . . .
எங்களுக்கு சுதந்திரம் தாரும். . .
திலகரே வாரும் . . .
சுயராஜ்யம் எனது பிறப்புரிமை
என்று எங்களுக்குச் சொல்லித்தாரும். . .
கப்பலோட்டிய தமிழா . . .
எங்கே போனீர் . . .
சுதேசிக் கப்பலை ஓட்டிக் காட்டும் . . .
பகத்சிங்கே வா . . .
மீண்டும் ஒரு புரட்சி செய் . . .
எங்களுக்குப் போராடச் சொல்லிக்கொடு . . .
கொடி காத்த குமரா . . .
நம் தேசியக் கொடியை
உயர்த்திப் பிடிக்க ஓடி வா . . .
வீரபாண்டிய கட்டபொம்மா . . .
இந்நாட்டின் விரோதிகளைக்
கொல்ல வா . . .
ஜான்சி ராணி லக்ஷ்மியே . . .
தேசப்பற்றில்லாத இந்தியரின்
தலையைக் கொய்ய வா . . .
சத்ரபதி சிவாஜியே . . .
இந்நாட்டை ஆளும் கொள்ளையரை
அடக்க குதிரை மீதேறி வா . . .
இந்தியாவின் இரும்பு மனிதா . . .
இந்நாட்டின் கோயில்களைக்
காக்க விரைந்தோடி வா . . .
இன்னும் பெயர் சொல்ல மறந்த,
பெயர் தெரியாத சுதந்திரத் தியாகிகளே
வேகமாக வாரீர் . . .
ஊழலிலும்,அசிரத்தையிலும்,
சுயநலத்திலும் மூழ்கிக்கொண்டிருக்கும்
பாரதத்தைக் காக்க வாருங்கள் . . .
உங்களால் மட்டுமே முடியும் . . .
எங்களை வழி நடத்த யாருமில்லை . . .
எங்களுக்கும் பொறுப்பில்லை . . .
நீங்கள்தான் இந்த நாட்டை
அன்னியரிடமிருந்து காத்தீர் . . .
இப்போது நம் நாட்டை
நம்மவரிடமிருந்து காப்பாற்ற
வாரீர். . . வாரீர் . . . வாரீர் . . .
இங்கே வெட்டியாக ஒரு
சுதந்திர தினக் கொண்டாட்டம் . . .
இனிப்பைத் திண்பதும்,
போட்டிகள் வைப்பதும்,
தற்பெருமை பேசுவதும்,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும்,
வயிறு முட்டத் திண்பதும்,
சோம்பேறியாய் தூங்குவதும்,
இவையே இவர்கள் கொண்டாடும்
சுதந்திர தினம் . . .
யாரை ஏமாற்ற இந்த வெளிவேஷம் . . .
எங்களின் முகமூடிகளைக்
கிழிக்க வாருங்கள் . . .
எங்களின் மனச்சாட்சியைக்
கேள்விகேட்க வாருங்கள் . . .
அப்பொழுதாவது நாங்கள்
திருந்துவோமா ? ! ?
எதிர்கால சந்ததி எங்களை
கேள்விகேட்கும் முன்பு
எங்களை சரி செய்ய வாருங்கள் . . .
நாளைய பாரதம் . . .? ! ?
காலம் பதில் சொல்லும் . . .
சொல்லடா க்ருஷ்ணா . . .
ஏனிந்தக் கொடுமை ? ? ?
யார் செய்த சூழ்ச்சி ? ? ?
எந்தத் தலைமுறையின் சாபம் ? ? ?
நாங்கள் திருந்தும் காலம் என்றோ ? ? ?
திருந்துவோமா . . .? ? ?
இல்லையென்றால்
வந்து இந்த அசுரர்களை
பூண்டோடு அழித்துவிடு . . .
நாளைய பாரதம் வளமாகட்டும் . . .
பாரதியே வா . . .
மீண்டும் ஒரு முறை
வீரமாகப் பாடு . . .
காந்தியே வாரும். . .
இன்னொரு சத்தியாக்ரஹத்தை
தொடங்கும் . . .
சுபாஷ் சந்திர போஸே வாரும் . . .
ரத்தம் தருகிறோம் . . .
எங்களுக்கு சுதந்திரம் தாரும். . .
திலகரே வாரும் . . .
சுயராஜ்யம் எனது பிறப்புரிமை
என்று எங்களுக்குச் சொல்லித்தாரும். . .
கப்பலோட்டிய தமிழா . . .
எங்கே போனீர் . . .
சுதேசிக் கப்பலை ஓட்டிக் காட்டும் . . .
பகத்சிங்கே வா . . .
மீண்டும் ஒரு புரட்சி செய் . . .
எங்களுக்குப் போராடச் சொல்லிக்கொடு . . .
கொடி காத்த குமரா . . .
நம் தேசியக் கொடியை
உயர்த்திப் பிடிக்க ஓடி வா . . .
வீரபாண்டிய கட்டபொம்மா . . .
இந்நாட்டின் விரோதிகளைக்
கொல்ல வா . . .
ஜான்சி ராணி லக்ஷ்மியே . . .
தேசப்பற்றில்லாத இந்தியரின்
தலையைக் கொய்ய வா . . .
சத்ரபதி சிவாஜியே . . .
இந்நாட்டை ஆளும் கொள்ளையரை
அடக்க குதிரை மீதேறி வா . . .
இந்தியாவின் இரும்பு மனிதா . . .
இந்நாட்டின் கோயில்களைக்
காக்க விரைந்தோடி வா . . .
இன்னும் பெயர் சொல்ல மறந்த,
பெயர் தெரியாத சுதந்திரத் தியாகிகளே
வேகமாக வாரீர் . . .
ஊழலிலும்,அசிரத்தையிலும்,
சுயநலத்திலும் மூழ்கிக்கொண்டிருக்கும்
பாரதத்தைக் காக்க வாருங்கள் . . .
உங்களால் மட்டுமே முடியும் . . .
எங்களை வழி நடத்த யாருமில்லை . . .
எங்களுக்கும் பொறுப்பில்லை . . .
நீங்கள்தான் இந்த நாட்டை
அன்னியரிடமிருந்து காத்தீர் . . .
இப்போது நம் நாட்டை
நம்மவரிடமிருந்து காப்பாற்ற
வாரீர். . . வாரீர் . . . வாரீர் . . .
இங்கே வெட்டியாக ஒரு
சுதந்திர தினக் கொண்டாட்டம் . . .
இனிப்பைத் திண்பதும்,
போட்டிகள் வைப்பதும்,
தற்பெருமை பேசுவதும்,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும்,
வயிறு முட்டத் திண்பதும்,
சோம்பேறியாய் தூங்குவதும்,
இவையே இவர்கள் கொண்டாடும்
சுதந்திர தினம் . . .
யாரை ஏமாற்ற இந்த வெளிவேஷம் . . .
எங்களின் முகமூடிகளைக்
கிழிக்க வாருங்கள் . . .
எங்களின் மனச்சாட்சியைக்
கேள்விகேட்க வாருங்கள் . . .
அப்பொழுதாவது நாங்கள்
திருந்துவோமா ? ! ?
எதிர்கால சந்ததி எங்களை
கேள்விகேட்கும் முன்பு
எங்களை சரி செய்ய வாருங்கள் . . .
நாளைய பாரதம் . . .? ! ?
காலம் பதில் சொல்லும் . . .
சொல்லடா க்ருஷ்ணா . . .
ஏனிந்தக் கொடுமை ? ? ?
யார் செய்த சூழ்ச்சி ? ? ?
எந்தத் தலைமுறையின் சாபம் ? ? ?
நாங்கள் திருந்தும் காலம் என்றோ ? ? ?
திருந்துவோமா . . .? ? ?
இல்லையென்றால்
வந்து இந்த அசுரர்களை
பூண்டோடு அழித்துவிடு . . .
நாளைய பாரதம் வளமாகட்டும் . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக