அனந்தன் காடு . . .
ராதேக்ருஷ்ணா
காட்டுக்கு வா . . .
அனந்தன் காட்டுக்கு வா . . .
அனந்தபத்மநாபனின் காட்டுக்கு வா . . .
பூர்வ ஜன்ம கர்ம வினை என்னும்
காட்டை அழித்துப் போட உடனே
அனந்தன் காட்டுக்கு வா . . .
துக்க மயமான சம்சாரக் காட்டை
இல்லாமல் செய்ய வேகமாக
அனந்தன் காட்டுக்கு வா . . .
காம, கோப, தாப ரூபமான
ஆசை காட்டை அழிக்க சீக்கிரமாக
அனந்தன் காட்டுக்கு வா . . .
சந்தேகம், பொறாமை, பயம் நிறைந்த
அஞ்ஞானக் காட்டையழிக்க அதிவேகமாக
அனந்தன் காட்டுக்கு வா . . .
நாம ஜபத்தின் பலமறிய,
பக்தியின் பெருமையை உணர, ஆசையாய்
அனந்தன் காட்டுக்கு வா . . .
திவாகர முனிக்காய் 18 அடியாய்
படுத்திருக்கும் பத்மநாபனை தரிசிக்க
அனந்தன் காட்டுக்கு வா . . .
ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம்,
ஆதிதைவிகம் போன்ற தாபங்கள் நீங்க
அனந்தன் காட்டுக்கு வா . . .
பில்வமங்களர் தந்த உப்பு மாங்காயை
ரசித்து சுவைத்து திளைக்க
அனந்தன் காட்டுக்கு வா . . .
விதுரரும், பலராமரும், ஆளவந்தாரும்,
ராமானுஜரும், சைதன்யரும் அனுபவித்த
அனந்தன் காட்டுக்கு வா . . .
மூன்று வாசலில் ஆதி மூலத்தைப் பார்க்க,
மும்மூர்த்திகளை பார்க்க அழகாய்
அனந்தன் காட்டுக்கு வா . . .
அனந்த புர நகர் புகுவாய் என்று
நம்மாழ்வாரும் வாயாரச் சொன்ன
அனந்தன் காட்டுக்கு வா . . .
மஹாராஜா ஸ்வாதித் திருநாளும்
ஆசையாய் அனுபவித்த பத்மநாபனைக் காண
அனந்தன் காட்டுக்கு வா . . .
அனந்தன் காடு தான் . . .
இன்று அனந்தபுரி . . .
அதுவே திருவனந்தபுரம் . . .
18 அடி அனந்தபத்மநாபனை
அனுபவிக்க உடனே வா . . .
இன்று ஸ்ரீ அனந்தபத்ம நாபன்
கையில் வில்லேந்தி,
ஸ்ரீ நரசிம்மரும், ஸ்ரீ க்ருஷ்ணனும்
உடன் வர வேட்டையாட வருகிறான் . . .
வருவாய் . . .
நாமும் வேட்டையாடப் போவோம் . . .
ராஜாதி ராஜனான,
ஒன்றரை லக்ஷம் கோடி சொத்துக்குரியவனோடு,
ஆனந்தமாய் வேட்டையாடப் போகலாம் வா . . .
சீக்கிரம் வா . . .
வேட்டைக்கு பத்மநாபன் தயாராயாச்சு . . .
அனந்தன் காடும் தயாராயாச்சு . . .
நானும் கிளம்பிவிட்டேன் . . .
வா. . . ஓடோடி வா . . .
இரவு 8 30 மணிக்கு
வேட்டைக்கு வந்துவிடு . . .
உனக்காக
ஸ்ரீ பத்மநாபனும், ஸ்ரீ நரசிம்மரும், ஸ்ரீ க்ருஷ்ணனும்
கூடவே பாகவதர்களும்,
அடியேனும் காத்திருக்கிறோம் . . .