உள்ளத்தை அள்ளித்தா ! ! !
ராதேக்ருஷ்ணா
யாரறிவார் ?
உன்னை உள்ளபடி யாரறிவார் ?
கண்ணனைத் தவிர வேறு யார் தான்
உன்னை உள்ளபடி அறிவார் ?
மற்றவருக்கு எல்லாம்
உனது கோபம் தெரியும் !
மற்றவருக்கு எல்லாம்
உனது பலவீனம் தெரியும் !
மற்றவருக்கு எல்லாம்
உனது பயம் தெரியும் !
மற்றவருக்கு எல்லாம்
உனது அழுகை தெரியும் !
மற்றவருக்கு எல்லாம்
உன் உடலின் உயரம் தெரியும் !
மற்றவருக்கு எல்லாம்
உன் உடலின் அமைப்பு தெரியும் !
மற்றவருக்கு எல்லாம்
உன் முகவரி தெரியும் !
மற்றவருக்கு எல்லாம்
நீ ஆணா பெண்ணா என்பது தெரியும் !
ஆனால் உன் மனது யாருக்கு தெரியும் ?
அதன் ஆழம் யாருக்குத்தான் புரியும் ?
அந்த மனதின் வலிகள்
எத்தனையென்று யாருக்கு புரியும் ?
அந்த மனதின் காயங்கள்
எவ்வளவு என்று யாருக்குத்தான் தெரியும் ?
அந்த மனதின் தாபங்கள்
யாரால் புரிந்து கொள்ளமுடியும் ?
அந்த மனதின் கேள்விகள்
யாருக்குக் கேட்க்கும் ?
அந்த மனதின் புலம்பல்களை
யார் காது கொடுத்து கேட்கிறார்கள் ?
அந்த மனதின் மொழி
யாருக்குப் புரியும் ?
அந்த மனதிற்கு யார் தான்
சமாதானம் சொல்லமுடியும் ?
அந்த மனதிற்கு யார் தான்
நிம்மதி தர முடியும் ?
மற்றவர் எல்லாம் நம் உடலை
விட்டு வெளியில் இருக்கிறார் ...
கண்ணன் மட்டுமே நம்முள்
எப்போதும் இருக்கிறான் ! ! !
உள்ளே இருப்பவனுக்கே
உள்ளே நடக்கும் போராட்டம் தெரியும் ! ! !
உள்ளே இருப்பவனுக்கே
உள்ளே பேசும் மொழி புரியும் ! ! !
உள்ளே இருப்பவனுக்கே
உள்ளே அழும் அழுகை தெரியும் ! ! !
உள்ளிருப்பவனே
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி
உணர்வான் ! ! !
உன் உள்ளத்தை
உன் உள்ளேயிருப்பவனிடம்
உள்ளபடி ஒப்படைத்துவிடு ! ! !
உன் உள்ளமும் உருப்படும் !
உன் வாழ்வும் வளம் பெறும் ! !
உன் உள்ளத்திற்கு என்றும்
ஒரே சொந்தம் கண்ணனே ! ! !
அவனே உன்னை
உள்ளன்போடு நேசிக்கிறான் ! ! !
உள்ளத்தை அள்ளித்தா ! ! !
உள்ளபடி அள்ளித்தா ! ! !
உண்மையாய் அள்ளித்தா ! ! !
உறுதியாய் அள்ளித்தா ! ! !
பிறகு அவன் தன்னையே
உனக்கு அள்ளித்தருவான் ! ! !
சரியாகச் சொன்னால்
அவன் தன்னையே உனக்கு
தந்துவிட்டதை நீ உணர்வாய் ! ! !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக