644. தமிழ் புத்தாண்டு !
அகத்தியர் சொல்படி
வழிபட்டு வாழும்
உன்னத தமிழருக்கு,
சிறந்த சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
தொல்காப்பியரின்
தொன்மையைப் பேசும்,
தொய்வில்லா தமிழருக்கு,
தெளிவான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ஆழ்வார்கள் சொன்ன
பாசுரங்கள் சேவிக்கும்
அற்புத தமிழருக்கு,
அருமையான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
நாயன்மார்கள் நவின்ற
பதிகங்கள் பாடும்
நன்மைமிகு தமிழருக்கு
நல்லதான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
கம்பனின் ராமாயணத்தில்
களித்துத் திளைக்கும்
கவித்துவ தமிழருக்கு
காதலோடு சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ஔவையின் ஆத்திச்சூடியை
ஓயாமல் விரும்பும்
ஒப்புயர்வற்ற தமிழருக்கு
ஒற்றுமை தரும் சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
வள்ளுவரின் திருக்குறளை
வாய் நிறையப் பேசும்
வாட்டமில்லா தமிழருக்கு
வளமான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
மலையும் மலைசார்ந்த
குறிஞ்சி நிலத்தின்
குதூகலமான தமிழருக்கு
குறைவில்லா சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
காடும் காடுசார்ந்த
முல்லை நிலப்பகுதியின்
முதன்மையான தமிழருக்கு
முத்தான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
வயலும் வயல்சார்ந்த
மருத நிலப்பகுதியின்
மாண்புமிகு தமிழருக்கு
மரியாதையான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
கடலும் கடல்சார்ந்த
நெய்தல் நிலப்பகுதியின்
நேர்மையான தமிழருக்கு
நியாயமான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
மணலும் மணல் சார்ந்த
பாலை நிலப்பகுதியின்
பாசமுள்ள தமிழருக்கு
பாங்கான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
அகநானூறு புறநானூறு
அழகாய் தந்தவரின் வழிவந்த
அன்புமிக்க தமிழருக்கு
அசத்தலான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
இயல் தமிழ்,இசைத் தமிழ்,
நாடகத் தமிழ் என
முத்தமிழ் தமிழருக்கு
முதலான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
சேர சோழ பாண்டியர்
கட்டிய கோவில்களையும்
தெய்வங்களையும் மதிக்கும்
பக்திமிகு தமிழருக்கு
பாரம்பரிய சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும்,
திரைகடலோடியும் திரவியம் தேடு என்றும்,
தெளிவாய் சொன்ன
தேன் போன்ற தமிழருக்கு,
தித்திக்கும் சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
வந்தாரை வாழவைக்கும்,
நொந்தாருக்கு ஆறுதல் தரும்,
நாத்திகம் பேசாத,
ஆத்திக தமிழருக்கு
ஆசீர்வாத சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
வாழிய செந்தமிழ்,
வாழ்க நற்றமிழர்,
வாழிய பாரத மணித்திருநாடு,
வந்தேமாதரம் என்னும்
தேசப்பற்றுள்ள தமிழருக்கு
தீர்கமான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
©குருஜீ கோபாலவல்லிதாசர்