ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

அன்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 ஏப்ரல், 2018

643. காவிரி !

காவிரி !

நம் அன்னை !
நம் பாரதத்தின் சொத்து !

காவிரியின் மடியில்,
தமிழர்களும், கன்னடர்களும்
என்றுமே குழந்தைகள் !

மூத்த பிள்ளைக்கும்,
இளைய பிள்ளைக்கும்,
தாய் பேதம் பார்ப்பதில்லை !

காவிரியை தெய்வமாய் பார்ப்பவர்கள்,
அவளை வைத்து வியாபாரம் செய்வதில்லை !
அரசியல் செய்வதில்லை !

காவிரியை பிரச்சனையாய்
பார்ப்பவர்களாலேயே,
காவிரி மஹிமை
புரிவதில்லை !

காவிரியை அன்னையாய்
பார்ப்பவர்களால்
பிரச்சனைகள்
வருவதில்லை !

காவிரியாலேயே
தமிழகமும்,
கர்நாடகமும்
வாழ்கிறது !

காவிரியே...
தமிழக,
கர்நாடக
விவசாயிகளுக்கு
என்றுமே
நன்மை செய்வாள் !

காவிரி...
கருணையின் உரு !

காவிரி...
தெய்வீகத்தின் உரு !

காவிரி...
விளைச்சளின் கரு !

நாம் பிரார்த்திப்போம் !
காவிரியால்
தமிழகமும்
கர்நாடகமும்...
இன்னும் அன்பைப்
பறிமாற....

காவிரியால்
ஒற்றுமையே வளரும்...
காவிரியால்
நாட்டில் குழப்பத்தை
விளைவிப்பவரிடம்
இருந்து தேசத்தை
நாம் காப்போம் !

காவிரியில்...
தேவையான தண்ணீர்
எல்லோருக்கும்
கிடைக்கட்டும்...

காவிரி....
இனி எல்லோருக்கும்
அன்பை,
அழகை,
விளைச்சலை,
பாசத்தை,
நிம்மதியை,
ஆனந்தத்தையே...
தர நாம் பிரார்த்திப்போம்...

என்றோ ஆரம்பித்த,
காவிரி விவகாரம்...
நம் தலைமுறையோடு
நிரந்தரமாக முடியட்டும்...

எதிர்காலம்....
காவிரியின் கரையில்,
அமிருதமான தண்ணீரில்,
நிம்மதியாய்
வாழட்டும்....

இந்தக் காவிரிக் கவிதை...
இத்தனைக்கும்
நடுவில்,
அனைவரையும்,
வாழவைக்கத்துடித்து,
ஜீவ நதியாய்...
ஓடிக்கொண்டிருக்கும்
காவிரிக்கு
சமர்ப்பணம்...

Read more...

வெள்ளி, 17 மார்ச், 2017

பாவமன்னிப்பு !

இயற்கை அன்னையே...
மன்னிப்பு கோருகிறோம்...
மழை தா...
நீ கருணையின் உறைவிடமன்றோ...

மரங்கள் நட்டது முன்னோரின் நல்லெண்ணம்...
மரங்களை வெட்டியது
எம் மதியீனம்....
ஆனாலும் இயற்கை அன்னையே...
எம்மை மன்னித்து,
மழை தா !

குளம் வெட்டியது
முன்னோரின் புத்திசாலித்தனம் !
குளத்தைத் தூர்த்தது
எம் சுயநலம் !
ஆனாலும் இயற்கை அன்னையே...
எம்மை மன்னித்து
மழை தா !

ஏரிகள் செய்தது
முன்னோரின் முன்னேற்பாடு !
ஏரிகளைக் அழித்தது
எம் அகம்பாவம் !
ஆனாலும் இயற்கை அன்னையே...
எம்மை மன்னித்து
மழை தா !

ஆறுகளை தெய்வமாய்
மதித்தது முன்னோரின்
தீர்க்கதரிசனம் !
ஆறுகளைக் கெடுத்தது
எம் முட்டாள்தனம் !
ஆனாலும் இயற்கை அன்னையே...
எம்மை மன்னித்து
மழை தா !

விவசாயிகளைக் கொண்டாடியது,
முன்னோரின் நன்றிபெருக்கு !
விவசாயத்தை அவமதித்தது
எம் அறியாமையே !
ஆனாலும் இயற்கை அன்னையே...
எம்மை மன்னித்து
மழை தா !

மண்ணைத் தாயாய் வழிபட்டது
முன்னோரின் பக்குவம் !
மண்ணை மலடாக்க ரசாயணம்
இட்டது எம் பேராசை !
ஆனாலும் இயற்கை அன்னையே...
எம்மை மன்னித்து
மழை தா !

பறவை, மிருகம், பூச்சி,
எல்லாம் தம் இனமாய்
வாழவைத்தது முன்னோரின் சமத்துவம் !
நாங்களே உயர்ந்தவர்கள்,
எமக்கே எல்லாம் என
ஆக்கிரமித்தது எம் ஏகாதிபத்தியம் !
ஆனாலும் இயற்கை அன்னையே...
எம்மை மன்னித்து
மழை தா !

ஆயிரம் காரணம் சொன்னாலும்,
எம் குற்றங்கள் மன்னிக்க முடியாததே...
வினை விதைத்தோம்...
வினையை அனுபவிக்கிறோம்...
ஆயினும் தாயே...
பிள்ளைகள் பிழையைப் பொறுத்து,
வாழ உலகினில் பெய்திடாய் !!!
நாங்களும் மழை நீராட
உடனே அருள் செய் !

இயற்கை அன்னையே !
நின்னை சரணடைந்தோம் !
மழை தருவாய் எனக் காத்திருக்கிறோம் !

உன்னால் தான் வாழ்கிறோம் !
உன்னிடமே பாவம் செய்தோம் !
உன்னிடமே பாவமன்னிப்பு கேட்கிறோம் !

இயற்கை அன்னையெ !
அறியாத பிள்ளைகள் !
அன்பிலாத பிள்ளைகள் !
அக்கறையில்லாத பிள்ளைகள் !
ஆனாலும் கதியில்லாத பிள்ளைகள் !

நீ கைவிட்டால் நாங்கள் அனாதைகளே !
இயற்கை அன்னையே !
கோபம் போதும் !
தண்டனை போதும் !
இதற்கு மேல்
தண்டனை அனுபவிக்க சக்தி எமக்கில்லை !

இயற்கை அன்னையே !
இரங்காய்...
அருளாய்...
விரைவாய்...

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP