ஸ்ரீ பத்மநாபா சரணம் !
ஸ்ரீ பத்மநாபா சரணம்!
துவாரகையில் திவாகர முனிக்குச் சிறுபிள்ளையாய் காட்சி தந்த
என் செல்லமே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !
அவரின் கோபம் பிடிக்காமல் அனந்தன் காட்டிற்குள் வந்து ஒளிந்துகொண்ட என் சமத்தே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !
உன்னைத் தேடி வந்த திவாகர முனிக்கு இலுப்பை மரத்தில் காட்சி தந்த என் ராஜாவே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !
முனிக்காக 18 மைல் நீள
உருவத்தை 18 அடியாகக் குறைத்த
என் குஞ்சலமே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !
வில்வமங்கள சாமியார் தந்த
கண்ணி மாங்காயை ஆசையாய் ஏற்றுக் கொண்ட என் தங்கமே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !
அனந்த புர நகரம் புக வினைகள் கெடும் என்று சடகோபனுக்குச் சொன்ன என் சாமியே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !
அனிழம் திருநாள் ராஜாவின் திருப்படித்தானத்தை உகந்து
ஏற்ற என் செல்வமே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !
12008 சாளக்கிராம கடுசர்க்கரை யோக திவ்ய அனுக்ரஹ மூர்த்தியே, என் கண்ணே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !
திருவோணத்தில் அவதரித்து, ஆதிசேஷனில் பள்ளிகொண்ட
என் பிரிய ஆராவமுதே...
ஸ்ரீ பத்மநாபா சரணம் !
உனக்காகவே நான் !
எனக்காகவே நீ !
இதுவே வரம், தவம், சுகம் !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக