ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

பெரியது...

🙏🦚🦜🛕🇮🇳🕉️🪷

க்ருஷ்ணா !
நான் தேவகியோ வசுதேவரோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் யசோதையோ நந்தகோபனோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் கோபியோ, கோபனோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் மாடோ கன்றோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் கர்கரோ சாந்தீபனியோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் மயில்பீலியோ, புல்லாங்குழலோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் யமுனையோ, கோவர்த்தனமோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் அக்ருரரோ, விதுரரோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் சுதாமாவோ, அர்ஜுனனோ அல்ல !

க்ருஷ்ணா !
நான் நல்லவனா கெட்டவனா தெரியவில்லை !
நான் பாபியா புண்ணியனா தெரியவில்லை !
நான் முட்டாளா அறிவாளியா தெரியவில்லை !
நான் அசுரனா, பக்தனா தெரியவில்லை !

ஆனால் நீ பெரியவன் !
இந்த ஆவணி பெரியது !
இந்த அஷ்டமி பெரியது !
இந்த ரோகிணி பெரியது !
இந்த நாள் பெரியது !
இந்த இரவு பெரியது !

உன் கருணை பெரியது !
உன் உள்ளம் பெரியது !
உன் அன்பு பெரியது !
உன் எண்ணம் பெரியது !

என்னையும் உன்னிடம் வைத்துக்கொள்ளும் இந்த உரிமை பெரியது !

ஏதோ ஒரு ஜன்மாவில் இந்த ஜீவனும் உனக்காக மட்டுமே வாழும் வரம் தா...

எனக்காக, என் சுயநலத்திற்காக, ஆசைக்காக, காமத்திற்காக மட்டுமே வாழ்ந்தாலும் என்னையும் உன்னவனாக ஏற்கும் உன் திருவடிகளில் ஆத்ம சமர்ப்பணம்...

இன்று நான் உன்னை நினைக்க அன்று நீ பிறந்தனையோ...

இன்னும் இன்னும் பிறந்து வா....
என்னைப் போல் இங்கே கோடி கோடியாய் உண்டு...

உன் கருணையைத் தவிர போக்கிடம் அற்ற அல்ப ஜீவர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ள வா...

ராதேக்ருஷ்ணா !

குருஜீ கோபாலவல்லிதாசன்
ஜன்மாஷ்டமி இரவு 11.40
4.9.26, வெள்ளி

🪷🕉️🇮🇳🛕🦜🦚🙏

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP