ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 11 மே, 2010

கொள்ளையடி !


ராதேக்ருஷ்ணா


கொள்ளை !
பகல் கொள்ளை !
முகமூடிக் கொள்ளை !
நூதனக் கொள்ளை !
துணிகரக் கொள்ளை !

எத்தனை கொள்ளைகள் !
ஒவ்வொரு நாளும் உலகத்தில்
பலவிதத்தில் கொள்ளைகள்
நடக்கிறது !

நாமும் போவோம் வா !
கொள்ளையடிக்க !

இதுவரை யாரும் கொள்ளையடிக்காத
பல விலை உயர்ந்த பொருட்கள்
இந்த பூமியில் கொட்டிக்கிடக்கிறது !

புறப்படு !
முடிந்தவரை கொள்ளையடிப்போம் !

இவைகளைக் கொள்ளையடித்துவிட்டால்
பிறகு,
யாரிடமும் கெஞ்சவேண்டாம் !
எதற்கும் பயப்படவேண்டாம் !
உன் வம்சமே சௌக்கியமாயிருக்கலாம் !

ஆயுதம் வேண்டாம் !
கூட்டம் வேண்டாம் !
இருட்டு வேண்டாம் !
முகமூடி வேண்டாம் !
கத்தி வேண்டாம் !

அதோ ப்ரஹ்லாதன் !
பிடி !
ப்ரஹ்லாதனிடத்தில் தைரியத்தைக்
கொள்ளையடி !

ஆஹா! விதுரர் !
விடாதே !
விதுரரிடத்தில் வினயத்தைக்
கொள்ளையடி !

அங்கே பார் ! கோபிகைகள் !
சுற்றி வளை !
கோபிகைகளிடத்தில்
கொட்டிக்கிடக்கும் ப்ரேமையைக்
கொள்ளையடி !

ஜோர் ! ஜோர் ! துருவன் !
இறுக்கிப்பிடி !
துருவனிடத்தில் த்ருடத்தைக்
கொள்ளையடி !

சத்தம் போடாதே !
யசோதா மாதா தயிர் கடைகிறாள் !
பின்னே சென்று கண்ணை மூடு !
யசோதா மாதாவிடத்தில்
வாத்ஸல்யத்தைக்
கொள்ளையடி !

மரத்திலிருந்து கீழே குதி !
நாரதரை தடுத்து நிறுத்து !
நாரதரிடமிருந்து
நாம ஜபத்தைக்
கொள்ளையடி !

புதரில் ஒழிந்து கொள் !
அதோ ஒரு கிளி வருகிறது !
சுகப்ரும்ம கிளி வருகிறது !
அதன் வாயில் ஒரு பழம் இருக்கிறது !
பாகவதமாகிய பழத்தை
சுகப்ரும்மத்திடமிருந்து
கொள்ளையடி !

கையில் வில்லோடு
அர்ஜுனன் வருகிறான் !
ஒடிப் போய் பிடி !
அர்ஜுனனிடத்தில்
பகவத் கீதையைக்
கொள்ளையடி !

படுக்கையில் பீஷ்மர்
கிடக்கிறார் !
மேலே விழுந்து
விஷ்ணு சஹஸ்ர நாமத்தைக்
கொள்ளையடி !

தன்னை மறந்து
சந்த் துகாராம் பஜனை செய்கிறார் !
ரஹஸ்யமாக,அவருக்குத் தெரியாமல்
விட்டல் பஜனையைக்
கொள்ளையடி !

சப்தம் போடாதே !
வடுக நம்பி வருகிறார் !
ஆசார்ய கைங்கர்யத்தை
வடுகநம்பியிடமிருந்து
கொள்ளையடி !

ராஜா அம்பரீஷன் உட்கார்ந்திருக்கிறான் !
சடக்கென்று அவன்
வயிற்றைப் பிடித்து
விரதத்தைக் கொள்ளையடி !

ஜடபரதர் தனிமையிலிருக்கிறார் !
காலைப் பிடித்து
ஜடபரதரிடமிருந்து
வைராக்யத்தைக் கொள்ளையடி !

சத்ரபதி சிவாஜி வருகிறான் !
குதிரை மீதேறி அவனைத் துரத்து!
சத்ரபதி சிவாஜியிடமிருந்து
வீரத்தைக் கொள்ளையடி !

சுநீதி தேவி ப்ரார்த்தனை செய்கிறாள் !
மெதுவாகச் சென்று
துருவனின் தாயார் சுநீதி தேவியிடமிருந்து
ப்ரார்த்தனையைக் கொள்ளையடி !

நில்! கவனி ! தயாராகு !
ஏகநாதர் கோதாவரியில் குளிக்கிறார் !
உள் நீச்சல் அடித்து அவரைப் பிடி !
ஏகநாதரிடமிருந்து பொறுமையைக் கொள்ளையடி !

லக்ஷ்மணன் வில்லும் அம்புமாக அலைகிறான் !
ஜாக்கிரதையாக ஓடி அவனைக் கைது செய்!
லக்ஷ்மணனிடமிருந்து
பகவத் கைங்கர்யத்தைக் கொள்ளையடி !

கையில் கிளியோடு ஆண்டாள் சிரிக்கிறாள் !
அவள் தூங்கும்போது
அருகில் நில் !
ஆண்டாளிடமிருந்து
க்ருஷ்ண கனவைக் கொள்ளையடி !

அதோ பக்த ராஜ அனுமன் !
தனியாக காட்டில் அலைகிறார் !
அமைதியாக அவர் பக்கத்தில் செல் !
ஆஞ்சனேயரிடமிருந்து
பக்தி அனுபவத்தைக் கொள்ளையடி !

ஆழ்வார் திருநகரியில்,புளிய மர பொந்தில்
ஸ்வாமி நம்மாழ்வார் அமர்ந்திருக்கிறார் !
ஒரு குண்டுக் கல்லைத் தூக்கிக் கீழே
போட்டு, ஸ்வாமி நம்மாழ்வாரிடமிருந்து
தியானத்தைக் கொள்ளையடி !

கையில் த்ரிதண்டத்துடன்,
ஸ்வாமி இராமானுஜர் திருக்கோஷ்டியூர்
கோயில் கோபுரத்தில் இருக்கிறார் !
யதிராஜர் எம்பெருமானார் பவிஷ்யதாசார்யர்
ஸ்வாமி இராமானுஜரிடமிருந்து
தியாகத்தைக் கொள்ளையடி !

அதோ ஊர்ந்து ஊர்ந்து
கை காலில்லாத கூர்மதாஸர் செல்கிறார் !
அவருக்கு பணிவிடைகள் செய்து,
கூர்மதாஸரிடமிருந்து விடாமுயற்சியைக்
கொள்ளையடி !

அங்கே பார் ! தன்னை மறந்து
பூரி ஜகந்நாதனின் சன்னிதியில்
ஸ்ரீ க்ருஷ்ணசைதன்ய மஹாப்ரபு
ப்ரேமையில் நாமஜபத்தோடு நாட்டியமாடுகிறார் !
இறுக்கி ஒரு ப்ரேமாலிங்கனம்
செய்து ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரிடமிருந்து
ப்ரேம நாட்டியத்தைக் கொள்ளையடி !

அரசவையில் சிரத்தையோடு
ஜனக மஹாராஜா உட்கார்ந்திருக்கிறார் !
அவர் அருகில் நின்று கொண்டு,
ஜனகருக்குத் தெரியாமல்
அவரிடமிருந்து கர்மயோகத்தைக் கொள்ளையடி !

திருவாலி திருநகரியில் பரிவேட்டையில்
திருமங்கையாழ்வார் தயாராயிருக்கிறார் !
அவருடைய வேலைக்காரனாக இருந்து,
திருமங்கையாழ்வாரிடமிருந்து ததியாராதனத்தைக்
கொள்ளையடித்துவிடு !

திருஅனந்தபுரத்தில் ஸ்ரீஅனந்தபத்மநாபரின்
சன்னிதியில்,ஆனந்த பாஷ்பத்தோடு,
புளகாங்கிதமாக,மஹாராஜா ஸ்வாதித் திருநாள்
கைகூப்பி தொழுதுகொண்டிருக்கிறார் !
அற்புதமான கவித்வத்தை
மஹாராஜா ஸ்வாதித் திருநாளிடமிருந்து
கொள்ளையடி !

பண்டரீபுரத்தில்,பாண்டுரங்கன் சன்னிதியில்,
அழகாக ஸ்ரீ நாமதேவர் பகவானுக்கு
நிவேதனம் செய்கிறார் !
அவருடன் தோழமையோடு பழகி
பகவத் நிவேதனத்தை
ஸ்ரீ நாமதேவரிடமிருந்துக் கொள்ளையடி !

குருவாயூரப்பனின் சன்னிதியில்
ஆனந்தமாக,குதூகலத்தோடு,
ஸ்ரீ நாராயண பட்டத்திரி நிற்கிறார்!
உத்தமமான ஸ்ரீமன் நாராயணீயத்தை
ஸ்ரீ நாராயண பட்டத்திரியிடமிருந்து
கொள்ளையடி !

மறைந்து கொள் !
சப்திக்கின்ற அலைகளினால் அலங்கரிக்கப்பட்ட,
கன்னியாகுமரியின் சமுத்திரத்தின் நடுவில்,
ஒரு பாறையில் சலனமில்லாத
ஒரு வீரத்துறவி உட்கார்ந்திருக்கிறார் !
அந்த வீரத்துறவியான ஸ்வாமி விவேகானந்தரின்
இரும்பு நெஞ்சத்தை வேகமாகக் கொள்ளையடி !

ஆஹா!ஐயா!ஜோர்!அற்புதம்!
ராதிகா ராணி அழகாக நிற்கிறாள் !
கண்களில் கண்ணீரோடு,
ராதையின் திருப்பாதத்தில் விழு !
ராதிகாவிடமிருந்து
க்ருஷ்ணனைக் கொள்ளையடி !

இன்னும் நிறைய கொள்ளையடிக்கலாம் !
ராத்திரி படுக்கையில் படுத்துக்கொண்டு,
நிறைய யோசனை செய் !

இன்னும் கோடி பக்தர்கள்
பூமியில் இருக்கிறார்கள் !
ஒவ்வொருவரிடமிருந்தும்
ஒவ்வொன்றைக் கொள்ளையடித்துவிடு !

உன் ஆயுள் முழுக்க இந்த சொத்து
உன்னோடிருக்கும் !

இவைகளைக் கொள்ளையடித்தால்
உனக்கு தண்டனை கிடையாது !

இந்தக் கொள்ளைக்கு
உனக்கு வைகுந்தத்தில்
நிரந்தர வாசம் கிடைக்கும் !

நீ இந்த உடலை விட்டுச் செல்லும்போது
இவைகள் உன் வம்சத்திற்குக்
கிடைக்கும் !

இந்தக் கொள்ளைக்கு
உனக்கு க்ருஷ்ணனின்
ஆசிர்வாதமும்,பக்தர்களின்
அனுக்ரஹமும் பூரணமாயுண்டு !

இந்தக் கொள்ளையடிக்கத்தான்
நான் பூமியில் வந்திருக்கிறேன் !

நிறைய கொள்ளையடித்து விட்டேன் !
ஆனால் போதுமென்று தோன்றவில்லை !
கொள்ளையடித்துக் கொண்டயிருக்கிறேன் !
ஆயுள் உள்ளவரை கொள்ளையடிப்பேன் !
இந்த உடல் போனபின்னும் திரும்ப
இன்னொரு உடல் என் கண்ணனிடம்
வாங்கிவருவேன் ! பிரளயத்தில் உலகம்
அழியும்வரை கொள்ளையடித்துக்கொண்டே
இருப்பேன் !

வைகுந்தம் போய் கொள்ளையடிப்பேன் !
எல்லோரிடமும் கொள்ளையடிப்பேன் !
எல்லாவற்றையும் கொள்ளையடிப்பேன் !

ஆனாலும் உனக்குச் சொல்லவேண்டுமென்று
என் கண்ணன் சொல்லிவிட்டான் !
நானும் சொல்லிவிட்டேன் !

நீயும் கொள்ளையடித்து அனுபவி !

Read more...

திங்கள், 3 மே, 2010

பசி !

ராதேக்ருஷ்ணா

பசி !
உலகின் ஆதாரம் பசி !
வாழ்க்கையின் ரஹஸ்யம் பசி !
எல்லா ஜீவராசிக்கும் பொதுவானது பசி !

பசியாயிருப்பது பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனே !


பசியினால்தான் ஆகாரத்திற்கு மரியாதை !


பசியினால்தான் ருசிக்கு மரியாதை !


பசியினால்தான் சமையலுக்கு மரியாதை !


பசியினால்தான் தாய்ப்பாலுக்கு மரியாதை !


பசியினால்தான் காய்கறிகளுக்கு மரியாதை !


பசியினால்தான் பழைய சாதத்திற்கு மரியாதை !

பசியினால்தான் உழைப்பிற்கு மரியாதை !



பசியினால்தான் நேர்மைக்கு மரியாதை !


பசியினால்தான் நியாயத்திற்கு மரியாதை !


பசியினால்தான் தர்மத்திற்கு மரியாதை !


பசியினால்தான் பணத்திற்கு மரியாதை !


பசியினால்தான் வயலுக்கு மரியாதை !


பசியினால்தான் தண்ணீருக்கு மரியாதை !


பசியினால்தான் மழைக்கு மரியதை !


பசியினால்தான் விவசாயத்திற்கு மரியாதை !


பசியினால்தான் விவசாயிக்கு மரியாதை !


பசியினால்தான் விளைச்சலுக்கு மரியாதை !


பசியினால்தான் சேமிப்பிற்கு மரியாதை !


பசியினால்தான் தானியங்களுக்கு மரியாதை !


பசியினால்தான் சமைப்பவருக்கு மரியாதை !


பசியினால்தான் காய்கறி கடைக்கு மரியாதை !


பசியினால்தான் பழங்களுக்கு மரியாதை !


பசியினால்தான் விரதத்திற்கு மரியாதை !


பசியினால்தான் ப்ராசதத்திற்கு மரியாதை !


பசியினால்தான் நிவேதனத்திற்கு மரியாதை !


பசியினால்தான் வெண்ணைக்கு மரியாதை !


பசியினால்தான் நெய்க்கு மரியாதை !


பசியினால்தான் எண்ணைக்கு மரியாதை !


பசியினால்தான் தேனுக்கு மரியாதை !


பசியினால்தான் சோளத்திற்கு மரியாதை !


பசியினால்தான் திணைமாவுக்கு மரியாதை !


பசியினால்தான் ஊறுகாய்க்கு மரியாதை !


பசியினால்தான் அப்பளத்திற்கு மரியாதை !


பசியினால்தான் வாழைப்பூவுக்கு மரியாதை !


பசியினால்தான் வாழைத்தண்டிற்கு மரியாதை !


பசியினால்தான் நேரத்திற்கு மரியாதை !


பசியினால்தான் ஆரோக்கியத்திற்கு மரியாதை !


பசியினால்தான் விலைவாசிக்கு மரியாதை !


பசியினால்தான் பொருளாதாரத்திற்கு மரியாதை !


பசியினால்தான் பதவிக்கு மரியாதை !


பசியினால்தான் தோட்டங்களுக்கு மரியாதை !

பசியினால் பண்டிகைகளுக்கு மரியாதை !


பசியினால்தான் திவசத்திற்கு மரியாதை !


பசியினால்தான் மலத்திற்கு மரியாதை !


பசியினால்தான் ஆராய்ச்சிக்கு மரியாதை !


பசியினால்தான் விஞ்ஞானத்திற்கு மரியாதை !


பசியினால்தான் மெய் ஞானத்திற்கு மரியாதை !


பசியினால்தான் வளர்ச்சிக்கு மரியாதை !


பசியினால்தான் வறட்சிக்கு மரியாதை !


பசியினால்தான் பஞ்சத்திற்கு மரியாதை !


பசியினால்தான் ஜீவராசிகளுக்கு மரியாதை !


பசியினால்தான் தாய்மைக்கு மரியாதை !


பசியினால்தான் தந்தைக்கு மரியாதை !


பசியினால்தான் கல்விக்கு மரியாதை !


பசியினால்தான் காதலுக்கு மரியாதை !


பசியினால்தான் கல்யாணத்திற்கு மரியாதை !


பசியினால்தான் பசும்பாலுக்கு மரியாதை !


பசியினால்தான் விருந்திற்கு மரியாதை !


பசியினால்தான் அன்னதானத்திற்கு மரியாதை !


பசியினால்தான் தர்மத்திற்கு மரியாதை !


பசியினால்தான் அனாதை இல்லங்களுக்கு
மரியாதை !


பசியினால்தான் முதியோர் இல்லங்களுக்கு
மரியாதை !


பசியினால்தான் அடுப்பிற்கு மரியாதை !


பசியினால்தான் அக்னிக்கு மரியாதை !


பசியினால்தான் சூரியனுக்கு மரியாதை !


பசியினால்தான் காற்றிற்கு மரியாதை !


பசியினால்தான் மேகத்திற்கு மரியாதை !


பசியினால்தான் கலைகளுக்கு மரியாதை !


பசியினால்தான் பாத்திரங்களுக்கு மரியாதை !


பசியினால்தான் பள்ளிக்கூடத்திற்கு மரியாதை !


பசியினால்தான் பலவித சுவைகளுக்கு மரியாதை !


பசியினால்தான் வேதத்திற்கு மரியாதை !


பசியினால்தான் தெய்வத்திற்கு மரியாதை !


பசியினால்தான் சுத்தத்திற்கு மரியாதை !


பசியால்தான் பூமிக்கு மரியாதை !


பசியினால்தான் வாழ்க்கைக்கு மரியாதை !


அதனால் ஒரு பொழுதும்
பசியை அல்பமாக நினைக்காதே !


பசியை ஒருநாளும் அவமதிக்காதே !


பசியைத் தள்ளிப்போடாதே !


பசியேயில்லாத ஜீவராசிகளே இல்லை !


ராதேக்ருஷ்ணா

வாழ்வில் பலவிதமான
பசி உண்டு !

எல்லோருக்கும் பொதுவானது
வயிற்றுப்பசி !

குழந்தைகளுக்கு
விளையாட்டுப் பசி !

இளவயதுக்காரர்களுக்கு
உடல் பசி !

படிப்பவர்களுக்கு
கேள்விப்பசி !

படிக்கமுடியாதவர்களுக்கு
அறிவுப் பசி !

பல பெண்களுக்கு
நகைப் பசி !

திருடர்களுக்கு
கொள்ளைப் பசி !

தீவிரவாதிகளுக்கு
கொலைப் பசி !

முதலாளிகளுக்கு
பணப் பசி !

தொழிலாளிகளுக்கு
சம்பளப் பசி !

வியாபாரிகளுக்கு
லாபப் பசி !

சோம்பேறிகளுக்கு
வெட்டிப் பசி !

கொசுக்களுக்கு
ரத்தப் பசி !

ராஜாக்களுக்கு
ராஜ்யப் பசி !

அரசியல்வாதிகளுக்கு
பதவிப் பசி !

சுயநலவாதிகளுக்கு
தன்னலப் பசி !

பொதுநலவாதிகளுக்கு
கடமைப் பசி !

குடிகாரர்களுக்கு
போதைப் பசி !

கவிஞர்களுக்கு
கற்பனைப் பசி !

விஞ்ஞானிகளுக்கு
ஆராய்ச்சிப் பசி !

அடிமைகளுக்கு
சுதந்திரப் பசி !

ஏழைகளுக்கு
உணவுப் பசி !

பணக்காரர்களுக்கு
நிம்மதிப் பசி !

தனிமையிலிருப்பவர்களுக்கு
துணைப் பசி !

கூட்டதிலிருப்பவர்களுக்கு
தனிமைப் பசி !

நோயாளிகளுக்கு
ஆரோக்யப் பசி !

சங்கீதப் பிரியர்களுக்கு
சப்தப் பசி !

பேச்சாளர்களுக்கு
கூட்டப் பசி !

ஊமைகளுக்கு
மொழிப் பசி !

குருடர்களுக்கு
விழிப் பசி !

விரோதிகளுக்கு
சண்டைப் பசி !

தூதுவர்களுக்கு
சமாதானப் பசி !

பதவியிலிருப்பவர்களுக்கு
அதிகாரப் பசி !

பயந்தவர்களுக்கு
தைரியப் பசி !

செடி,கொடிகளுக்கு
தண்ணீர் பசி !

சம்சாரிகளுக்கு
சொத்துப் பசி !

வீரர்களுக்கு
வெற்றிப் பசி !

ஞானிகளுக்கு
ஞானப் பசி !

விரக்தர்களுக்கு
வைராக்யப் பசி !

பக்தர்களுக்கு
பக்திப் பசி !

கோபிகைகளுக்கு
ராசக்ரீடைப் பசி !

ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யருக்கு
ப்ருந்தாவனப் பசி !

ஸ்வாமி ராமானுஜருக்கு
கருணைப் பசி !

ஸ்வாமி விவேகானந்தருக்கு
வீரப் பசி !

மீரா மாதாவிற்கு
நாம சங்கீர்த்தனப் பசி !

ராதிகாவிற்கு
க்ருஷ்ணப் பசி !

உனக்கு என்ன பசி ? ! ?

உன் பசியைப் பொறுத்து
உன் ஆகாரம் !

உன் ஆகாரத்தைப் பொறுத்து
உன் மனம் !

உன் மனதைப் பொறுத்து
உன் இந்திரியங்கள் !

உன் இந்திரியங்களைப் பொறுத்து
உன் உடல் !

உன் உடலைப் பொறுத்து
உன் வாழ்க்கை !

சரியான பசிக்கு
அற்புதமான ஆகாரம் !

இன்று உன் பசியை
தீர்மானம் செய் ! ! !


Read more...

சனி, 1 மே, 2010

மாடு மேய்க்கப் போ !


ராதேக்ருஷ்ணா

மாடு மேய்க்கப் போ !

உருப்படாதவர்களைச் சாதாரணமாக
மற்றவர்கள் சொல்லும் வார்த்தை !

ஆனால் அகிலாண்ட கோடி
ப்ரும்மாண்ட நாயகன்
ஸ்ரீ க்ருஷ்ணனாக இடையர்
குலத்தில் வந்துதித்தபோது
யசோதா மாதாவும்,
நந்த கோபரும் அவனிடம்
சொன்னது
"மாடு மேய்க்கப் போ !

இனி யாராவது உன்னை
"மாடு மேய்க்கப் போ"
என்று சொன்னால் சந்தோஷப்படு !

க்ருஷ்ணனோடு
மாடு மேய்க்கப் போ !

ப்ருந்தாவனத்தில்
மாடு மேய்க்கப் போ !

கோகுலத்தில்
மாடு மேய்க்கப் போ !

பலராமனோடு
மாடு மேய்க்கப் போ !

கோப குழந்தைகளுடன்
மாடு மேய்க்கப் போ !

பண்டரீபுரத்தில்
மாடு மேய்க்கப் போ !


நீ கணக்கு பார்த்துக்கொள் !

முதலில் நீ மாடு மேய்க்கப்போனால்,
க்ருஷ்ணனோடு விளையாடலாம் !
ஆனந்தமாக விளையாடலாம் !
ஆசை தீர விளையாடலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால்,
க்ருஷ்ணனை உப்பு மூட்டை தூக்கலாம் !
க்ருஷ்ணன் முதுகில் உப்பு மூட்டை ஏறலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால்,
க்ருஷ்ணனின் தோள் மீது கை போடலாம் !
உன் தோள் மீது க்ருஷ்ணன் கை போடுவான் !

நீ மாடு மேய்க்கப்போனால்,
க்ருஷ்ணனோடு யமுனையில் குளிக்கலாம் !
க்ருஷ்ணனோடு யமுனையில் நீந்தலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால்,
க்ருஷ்ணனோடு ஆகாரம் சாப்பிடலாம் !
க்ருஷ்ணனுக்கு ஆகாரம் ஊட்டலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால்,
க்ருஷ்ணனின் மடியில் படுக்கலாம் !
க்ருஷ்ணனை உன் மடியில் படுக்கவைக்கலாம் !





நீ மாடு மேய்க்கப்போனால்

க்ருஷ்ணனுக்கு அலங்காரம் செய்யலாம்!
க்ருஷ்ணன் உனக்கு அலங்காரம் செய்வான் !


 நீ மாடு மேய்க்கப்போனால்
க்ருஷ்ணனின் புல்லாங்குழலோசை கேட்கலாம்!
க்ருஷ்ணனின் புல்லாங்குழலைப் பறிக்கலாம் !


நீ மாடு மேய்க்கப்போனால்
க்ருஷ்ணனிடம் பனம்பழம் கேட்கலாம் !
க்ருஷ்ணனோடு பனம்பழம் சாப்பிடலாம் !

 நீ மாடு மேய்க்கப்போனால்
க்ருஷ்ணனின் காளிய நர்த்தனம் பார்க்கலாம் !
க்ருஷ்ணனுக்கு முத்தம் தரலாம் !

 நீ மாடு மேய்க்கப்போனால்
க்ருஷ்ணனோடு உருண்டு புரளலாம் !
க்ருஷ்ணனோடு சண்டை போடலாம் !

 நீ மாடு மேய்க்கப்போனால்
க்ருஷ்ணனிடமிருந்து அடி வாங்கலாம் !
க்ருஷ்ணனை நாலு குத்து குத்தலாம் !

 நீ மாடு மேய்க்கப்போனால்
க்ருஷ்ணனை குனியவைத்து
பச்சைக்குதிரை தாண்டலாம் !
உன்னை குனியவைத்து க்ருஷ்ணனும்
பச்சைக்குதிரை தாண்டுவான் !

 நீ மாடு மேய்க்கப்போனால்



க்ருஷ்ணனின் கோமணத்தைத் திருடலாம் !
க்ருஷ்ணனை கெஞ்ச வைக்கலாம் !

  நீ மாடு மேய்க்கப்போனால்
க்ருஷ்ணனோடு கண்ணாமூச்சி விளையாடலாம் !
க்ருஷ்ணனின் கண்ணைக்கட்டி விளையாடலாம் !

 நீ மாடு மேய்க்கப்போனால்
தேவர்களைப் பார்க்கலாம் !
அசுரர்களை பரிகாசம் செய்யலாம் !


 நீ மாடு மேய்க்கப்போனால் 
க்ருஷ்ணனைத் திட்டலாம் !
க்ருஷ்ணனிடமிருந்து திட்டு வாங்கலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால் 
க்ருஷ்ணனின் தலையில் கைவைக்கலாம் !
க்ருஷ்ணனும் உன் தலையில் கை வைப்பான் !

 நீ மாடு மேய்க்கப்போனால் 
கோபிகைகளிடமிருந்து வெண்ணை திருடலாம்!
க்ருஷ்ணனை கோபிகைகளிடம் மாட்டிவிடலாம்!

நீ மாடு மேய்க்கப்போனால் 
கொக்கு அசுரனைப் பார்க்கலாம் !
க்ருஷ்ணன் அவனை வதைப்பதையும் காணலாம் !

 நீ மாடு மேய்க்கப்போனால்
க்ருஷ்ணனின் தோளோடு உரசலாம் !
க்ருஷ்ணனின் தோள்களில் தொங்கலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால் 
பலராமனோடு பேசலாம் !
க்ருஷ்ணனைப் பற்றி கோள் சொல்லலாம் !

 நீ மாடு மேய்க்கப்போனால் 
பாம்பின் வாயிலும் நுழையலாம் !
மீண்டும் க்ருஷ்ணனால் பிறக்கலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால் 
கோவர்த்தன மலையில் ஏறலாம் !
மழைக்கு கோவர்தன கிரியில் ஒதுங்கலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால்
ப்ருந்தாவனத்தில் மரமேறி குதிக்கலாம் !
குரங்குகளைத் துரத்தலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால் 
க்ருஷ்ணனின் எச்சிலைச் சாப்பிடலாம் !
கருஷ்ணனுக்கு எச்சிலைத் தரலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால் 
ப்ராம்மணர்களின் சாப்பாடு சாப்பிடலாம் !
க்ருஷ்ணனின் கருணையை அனுபவிக்கலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால் 
க்ருஷ்ணனுக்கு கிச்சு கிச்சு மூட்டலாம் !
க்ருஷணனின் சிரிப்பை ரசிக்கலாம் !

நீ மாடு மேய்க்கப்போனால் 
க்ருஷ்ணன் காக்காய் கடி கடித்த
கடலை உருண்டையை திங்கலாம் !
 க்ருஷ்ணன் அதிகமாக எடுத்துக்கொண்டால்
வாயார அவனை ஆத்திரம் தீர திட்டலாம்!


நீ மாடு மேய்க்கப்போனால்,
இதையெல்லாம் விட பெரிய பாக்கியம்
ஒன்று கிடைக்கும் !

ப்ரேமஸ்வரூபினி நம்முடைய
ராதிகா ராணியைப் பார்க்கலாம் !
ராதையின் திருவடிகளில்
சரணாகதி செய்யலாம் !
ராதையும் க்ருஷ்ணனும் சிரிக்கும்
அழகில் உன்னையே இழக்கலாம் .  .  .

அதனால் நேரத்தை வீணடிக்காதே !
உடனே,வேகமாக
மாடு மேய்க்கப் போ !

தினமும் இரவில் யாருக்கும்
தெரியாமல் ப்ரார்த்தனை செய்து,
கனவில் மாடு மேய்க்கப் போ !

ஒரு நாள் ப்ருந்தாவனத்தில்
இடையர் குலத்தில்,
ஒரு கோபனாகப் பிறப்பாய் !

தலையில் முண்டாசுடன்,
கையில் மாடு மேய்க்கும் கோலுடன்,
கட்டுச்சோற்றுடன்,
கொம்பு வாத்தியத்துடன்,
ஊதாங்குழலுடன்,
 காலில் சலங்கையுடன்,
தலையில் மயில் பீலியுடன்,
ஒரு கருப்பன்,
க்ருஷ்ணன் என்ற திருநாமத்துடன்
உன்னோடு மாடு மேய்க்கக் காத்திருக்கிறான் !  
 
சீக்கிரம் ! சீக்கிரம் ! சீக்கிரம் !

உன் பேரைச் சொல்லி அழைத்து,
உன் வீட்டு வாசலில் நிற்கிறான் !

க்ருஷ்ணனோடு மாடு மேய்க்கப் போ !


Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP