ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 10 ஜூன், 2012

இன்றே புரிந்தது !

ராதேக்ருஷ்ணா


ஒன்று எனக்குப் புரிந்தது !
எனக்கு இன்றே புரிந்தது !
இன்று நன்றாய் புரிந்தது !


நான் என்னைப் பற்றி
யோசிப்பதை விட
பார்த்தசாரதி என்னைப் பற்றி
நிறைய யோசிக்கிறான் !


என் எதிர்காலத்தை
என்னை விட பார்த்தசாரதி
தெளிவாய் அறிகின்றான் !


என் உடலின் பலத்தையும்,
என் மனதின் பலவீனத்தையும்,
என்னை விட பார்த்தசாரதி
சரியாக கணித்திருக்கிறான் !


 என் வாழ்வை, என் தேவைகளை
என்னை விட நன்றாக
பார்த்தசாரதி கவனித்துக்கொள்கிறான் !




என் கடந்த காலத்தை
நான் மறந்தாலும்,
என் பார்த்தசாரதி நன்றாக
ஞாபகம் வைத்திருக்கிறான் !




என் நிகழ்காலத்தை
என்னை விட என் பார்த்தசாரதி,
துல்லியமாய் கவனிக்கிறான் !




என் எதிர்காலத்தை
என்னை விட என் பார்த்தசாரதி
தெளிவாய் பார்க்கிறான் !


இவ்வளவும் அவன் செய்யும்போது,
நான் என் வாழ்க்கையில்
செய்யவேண்டியது எதுவுமில்லை !


ஒன்று உண்டு . . .
நான் செய்ய வேண்டியது . . .
பார்த்தசாரதியின் பாதமே
கதியாகக் கொண்டு,
ஒழுங்காக வாழவேண்டியது . . .


பார்த்தசாரதி மனம் நோகாமல்
வாழவேண்டியது . . .


பார்த்தசாரதி சந்தோஷப்படும்படி
வாழவேண்டியது . . .


பார்த்தசாரதி திருப்தியாகும்படி
வாழவேண்டியது . . .


இதுவே எனக்குப் புரிந்தது . . .
இன்றே புரிந்தது . . .
தெளிவாய் புரிந்தது . . .

Read more...

சனி, 9 ஜூன், 2012

சமத்தாக யோசி . . .

ராதேக்ருஷ்ணா


எல்லோரும் வெள்ளைக்கு
நடுவிலிருக்கும் ஒரு கறையைப்
பார்த்தால் . . .
நீ அந்தக் கறையைச் சுற்றியிருக்கும்
வெள்ளையைப் பார் !


எல்லோரும் ரோஜாச் செடியில்
உள்ள முட்களை கவனித்தால் . . ,
நீ அந்த முள்ளுச் செடியில் மலரும்
ரோஜாக்களைப் பார் !


எல்லோரும் கோடைக் காலத்தில்
சூரியனை சபித்தால் . . ,
நீ சூரிய வெப்பத்தின் சக்தியை
உபயோகப்படுத்தப் பார் !


எல்லோரும் மழையை வெறுத்து
ஒதுங்கி நின்றால் . . ,
நீ அந்த மழையில் நனைந்து
உன்னை குளிராக்கிக் கொள் !


எல்லோரும் பிரச்சனைகளில்
துவண்டு அழும்போது . . ,
நீ பிரச்சனைகளை உனது
வெற்றிப் படியாக்கிக் கொள் !


எல்லோரும் செலவுகளைக் கண்டு
வெறுத்து புலம்பினால் . . ,
நீ செலவுகளையே உனது
சேமிப்பாக வரவாக மாற்றி விடு !


எல்லோரும் பயத்தினால் வாழ்வை
யோசிக்க மறக்கும்போது . . ,
நீ தைரியத்தை மூலதனமாகக் கொண்டு
மாற்றி யோசிப்பாய் !


யோசிக்காமல் வாழமுடியாது !
சரியாக யோசிக்காமல் ஜெயிக்கமுடியாது !
தப்பாக யோசித்தால் தப்பிக்கமுடியாது !



மாற்றி யோசி . . .
விதவிதமாய் யோசி . . .
வித்தியாசமாய் யோசி . . .
விசித்திரமாய் யோசி . . .
விநோதமாய் யோசி . . .


எல்லோரும் எதைப் பலவீனமாக
நினைக்கிறார்களோ, அதை நீ
பலமாக மாற்றிக்கொள் !


எல்லோரும் எதைப் பலமாக
வைத்திருக்கிறார்களோ, அதை நீ
உன் அடிமையாக்கிக் கொள் !


பணத்தை உன் அடிமையாக்கு . . .
க்ருஷ்ணனுக்கு நீ அடிமையாயிரு . . .


இந்திரியங்களை உனக்கு அடிமையாக்கு . . .
குருவுக்கு நீ கொத்தடிமையாயிரு . . .


ஆசைகளை உன் கொத்தடிமையாக்கு . . .
நாமஜபத்திற்கு நீ நிரந்தர அடிமையாயிரு . . .


சரியாக யோசி . . .
சமத்தாக யோசி . . .
பலமாக யோசி . . .

அப்பொழுது சுலபமாய் ஜெயிப்பாய் !

இல்லையேல் தவறாக யோசிப்பதை விடு !
உடனே விடு !
இப்பொழுதே விடு !

நிம்மதியாய் அனுபவி . . .
நித்தியமாய் அனுபவி . . .
சுகமாய் அனுபவி . . .

வாழும் வரை அனுபவி . . .
வாழ்வை அனுபவி . . .


Read more...

வெள்ளி, 8 ஜூன், 2012

நீ தோற்பதில்லை . . .

ராதேக்ருஷ்ணா



வானத்திற்கு எல்லையில்லை !
 நீ வானம் போலே . . .

மேகங்கள் நிரந்தரமில்லை !
துன்பங்கள் மேகங்கள் போலே . . .


சூரியனில் இருட்டில்லை !
நீ சூரியன் போலே . . .



சூரியனை கொசு நெருங்குவதில்லை !
பிரச்சனைகள் கொசு போலே . . .

பூமியின் சுழற்சி தடைபடுவதில்லை !
நீ பூமியைப் போலே . . .


கடலை யாரும் அடக்கமுடிவதில்லை !
நீ கடலைப் போலே . . .

 
காற்றை யாரும் நிறுத்தமுடிவதில்லை !
நீ காற்றைப் போலே . . .


புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது . . .
நீயும் வெல்லும் பசியோடிரு . . .
 தோல்வி என்னும் புல்லைத் தீண்டாதே !


மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது . . .
முயற்சி தோற்கலாம் நீ தோற்பதில்லை . . .
நீ தோற்றாலும் உன் சக்தி இளைப்பதில்லை !


உன்னுள் ஒரு உன்னத சக்தி உண்டு !
 உன்னுள் ஒரு அதிசய பலம் உண்டு !
உன்னுள் ஒரு ரஹஸ்ய உத்வேகம் உண்டு !

வென்று காட்டுவாய்  . . .
வாழ்ந்து காட்டுவாய்  . . .
வரலாற்றை மாற்றிக் காட்டுவாய்  . . .



Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP