ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 11 ஆகஸ்ட், 2012

உன்னிஷ்டப்படி !

ராதேக்ருஷ்ணா
 
 
 விட்டலா . . .
உன்னைப் பார்க்க வருகிறோம் !
 
 
 விட்டலா . . .
உன் திருவடியை தரிசிக்க வருகிறோம் !
 
 
விட்டலா . . .
உன் திருவடியைப் பிடிக்க வருகிறோம் !
 
 
விட்டலா . . .
உன் திருவடியில் சரணமடைய வருகிறோம் !
 
 
விட்டலா . . .
உன் குழந்தைகள் ஆசையோடு வருகிறோம் !
 
 
விட்டலா . . .
ஒன்றும் அறியாத முட்டாள்கள் வருகிறோம் !
 
 
விட்டலா . . .
பக்தியை அனுபவிக்க வருகிறோம் !
 
 
விட்டலா . . .
உன் தரிசனம் எங்களுக்கு தருவாய் !
 
 
 விட்டலா . . .
உனது பண்டரீபுரத்தில் நடக்க அனுமதி தா !
 
 
விட்டலா . . .
உன் பக்தர்களின் கூட்டத்தில் இடம் தா !
 
 
விட்டலா . . .
எங்கள் இதயத்தில் நீ வர நாங்கள் வருகிறோம் !
 
 
விட்டலா . . .
எங்கள் குற்றங்களை மன்னித்துவிடு !
 
 
விட்டலா . . .
எங்களுக்கு நல்ல புத்தியைக் கொடு !
 
 
விட்டலா . . .
நீ ரசிக்கும் ஒரு பக்தியை எங்களுக்குத் தா !
 
 
விட்டலா . . .
துகாராம் போலே நாங்கள் மாற வரம் தா !
 
 
விட்டலா . . .
சக்குபாய் போலே உன்னைக் கட்ட கயிறு தா !
 
 
விட்டலா . . .
நாமதேவர் போலே உனக்கு 
 சப்பாத்தி தர அனுமதி தா !
 
 
விட்டலா . . .
சிவாஜி போலே உனக்குக்
கைங்கர்யம் செய்ய பலம் தா !
 
 
விட்டலா . . .
சோகாமேளர் போலே உனக்கு
அன்னம் தரும் ஆசை தா !
 
 
விட்டலா . . .
கானோபாத்ரா போலே உன்
கோயில் மரமாய் நிற்க ஞானம் தா !
 
 
விட்டலா . . .
ஞானேஸ்வரர் போலே உன்னை
வசப்படுத்த வைராக்யம் தா !
 
 
 விட்டலா . . .
கோமாபாய் போலே உனக்கு
ரொட்டி தர மனது தா !
 
 
விட்டலா . . .
கோரா கும்பரைப் போலே
உன்னைத் தம்பியாக்க சக்தி தா !
 
 
விட்டலா . . .
நீ சந்தோஷப்படும்படி வாழும்
நல்ல எண்ணங்கள் தா !
 
 
 இத்தனையும் நீ தருவாய் என
உன் அருகில் ஆசையாய் வருகிறோம் !
 
 
விட்டலா . . .
நீயே எங்களின் நாயகன் . . .
 
 
வருகிறோம் . . .உன்னிஷ்டப்படி !
தருவாய் தரிசனம் . . . ருக்குமாய் இஷ்டப்படி !
 
 
 

Read more...

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

என்ன சொல்வது க்ருஷ்ணா !

ராதேக்ருஷ்ணா...

க்ருஷ்ணனை பூமிக்கு வரப்
ப்ரார்தித்த பூதேவிக்கு நன்றி !

க்ருஷ்ணன் பூமிக்கு வருகிறான்
என்ற ப்ரும்மதேவருக்கு நன்றி !

க்ருஷ்ணனைத் தர முதலில்
தன்னைத் தந்த கீர்த்திமானுக்கு நன்றி !

க்ருஷ்ணனுக்காக தங்கள் இன்னுயிரைத்
தந்த ஐந்து அண்ணன்களுக்கும் நன்றி !

க்ருஷ்ணனை அனுபவிக்க எல்லாவற்றையும்
தந்த வசுதேவருக்கு நன்றி !

க்ருஷ்ணனுக்காக எல்லா வலிகளையும்
சுமந்த தேவகி மாதாவுக்கு நன்றி !

க்ருஷ்ணனுக்காக கைங்கர்யம் செய்ய
முதலில் வந்த பலராமருக்கு நன்றி !

க்ருஷ்ணனைத் தந்த இந்த
ராத்திரிக்கு கோடானுகோடி நன்றி !

க்ருஷ்ணனைக் கொடுத்த ரோஹினிக்கும்,
ஆவணிக்கும்,அஷ்டமிக்கும் நன்றி !

க்ருஷ்ணா . . . உன்னை எங்களுக்கும்
தந்த உனக்கு செல்லமான நன்றிகள் !

ராதிகா. . . க்ருஷ்ணனை அனுபவிக்க
எங்களுக்கும் தகுதி தந்த உனக்கு நன்றி !

க்ருஷ்ணனை சுகமாய் பெற்ற
வடமதுரைக்கு ஆயிரம் நன்றிகள் !

க்ருஷ்ணனுக்காகக் காத்திருந்து
வழி விட்ட யமுனா தேவிக்கு நன்றிகள் !

க்ருஷ்ணன் மீது மழை பெய்யாமல் காத்த ஆதிசேஷனுக்கு நன்றி சொல்ல வாயில்லை !

க்ருஷ்ணனுக்காக வழி மேல் விழி வைத்து
ஏங்கியிருந்து வரவேற்ற மாயைக்கு நன்றி !

க்ருஷ்ணனை உள்ளபடி காட்டிக்கொடுத்த
கோகுலத்திற்கு கோடானு கோடி நன்றிகள் !

க்ருஷ்ணனை மாட்டுக் காரனாய்
வளர்த்த யசோதைக்கு நன்றி !

க்ருஷ்ணனை பத்திரமாய் காப்பாற்றிய
நந்தகோபருக்கு நன்றி !

க்ருஷ்ணனுக்கு க்ருஷ்ணா என்று
பெயரிட்ட கர்க மஹரிஷிக்கு நன்றி !

க்ருஷ்ணனோடு வெண்ணை திருடி
அவனை திருடனாக்கிய கோபருக்கு நன்றி !

க்ருஷ்ணனை ராசம் ஆட வைத்த
எங்கள் கோபிகைகளுக்கு நன்றி !

க்ருஷ்ணனை பக்தருக்கு எளியவன்
எனக்காட்டின உரலுக்கும்,கயிறுக்கும்
உத்தமமான நன்றிகள் !

இப்படிப்பட்ட க்ருஷ்ண பொக்கிஷத்தை
எனக்குக் காட்டிக் கொடுத்த
என் குருஜீஅம்மாவுக்கு
ஆத்மா உள்ளவரை நன்றிகள் !

என்ன சொல்வது க்ருஷ்ணா. . . .

நான் க்ருஷ்ண சம்மந்தம் உடையவருக்கு
என்றும் நன்றிக்கடன் பட்டவன் . . .

இந்த கோகுலாஷ்டமியில்
க்ருஷ்ணனின் சம்மந்தப்பட்ட அனைவருக்கும்,
அனைத்து வஸ்துவுக்கும்,
அடியேன் கோடி நமஸ்காரங்கள் . . . .

நானும் உங்களைப் போல்
க்ருஷ்ணனை அனுபவிக்கவேண்டும் !

நானும் உங்களைப் போல்
க்ருஷ்ணனின் சொத்தாக வேண்டும் !

நானும் உங்களைப் போல்
க்ருஷ்ணனின் இஷ்டமாய் இருக்கவேண்டும் !

எல்லோரும் எனக்காக
என் க்ருஷ்ணனிடம் ஒரு வார்த்தைச்
சொல்லுங்கள் . . .

கோபாலவல்லி என்னும் பைத்தியம்
அவனுக்காக இங்கே இன்னமும்
அலைந்துகொண்டிருக்கிறது . . .

வருவான் என தனிமையில் நிற்கிறாள் !
வருவான் என அவமானத்திலும் வாழ்கிறாள் !
வருவான் என அழுது புலம்புகிறாள் !
வருவான் என உயிர் தரிக்கிறாள் !

வருவான் . . . வருவான் . . . வருவான் . . .
இது சத்தியம் ! சத்தியம் ! சத்தியம் !

Read more...

புதன், 8 ஆகஸ்ட், 2012

க்ருஷ்ணன் வரப்போறான் . . .

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணன் வரப்போறான் . . .

உன் வீட்டிற்கு க்ருஷ்ணன்
வரப்போறான் . . .

உன்னோடு விளையாடப் போறான் !

உன்னோடு பேசப் போறான் !

உன்னோடு சாப்பிடப் போறான் !

உன்னைக் கொஞ்சப் போறான் !

உன்னோடு தூங்கப் போறான் !

உன்னோடு சிரிக்கப் போறான் !

உன் அழுகையை மாற்றப் போறான் !

உன் துக்கத்தை தீர்க்கப் போறான் !

உன் பிரச்சனைகளை சரிசெய்யப் போறான் !

உனக்கு உதவப் போறான் !

உன்னோடு வாழப் போறான் !

உன்னோடு இருக்கப் போறான் !

உன்னைக் குஷிபடுத்தப் போறான் !

உன்னோடு வேலை செய்யப் போறான் !

உனக்கு அறிவுரை சொல்லப் போறான் !

உன் புலம்பலைக் கேட்கப் போறான் !

உன் கேள்விக்குப் பதில் சொல்லப்போறான் !

உனக்கு சமாதானம் தரப் போறான் !

உன்னைக் காதலிக்கப் போறான் !

உனக்கு தன் அன்பைத் கொடுக்கப் போறான் !

உன்னை அனுபவிக்கப் போறான் !

உனக்குத் தன்னைத் தரப்போறான் !

தயாராகு . . .
நாளை கண்ணன் வரும் நாள் . . .

உன்னிடம் தேடி வரும் நாள் . . .
உனக்காக வரும் நாள் . . .

அவன் தன் பிறந்தநாளுக்கு
இத்தனை பரிசுகளோடு உன்னைப்
பார்க்க வருகிறான் . . .

வழிமேல் விழி வைத்து காத்திரு ! ! !

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP