உன்னிஷ்டப்படி !
ராதேக்ருஷ்ணா
விட்டலா . . .
உன்னைப் பார்க்க வருகிறோம் !
விட்டலா . . .
உன் திருவடியை தரிசிக்க வருகிறோம் !
விட்டலா . . .
உன் திருவடியைப் பிடிக்க வருகிறோம் !
விட்டலா . . .
உன் திருவடியில் சரணமடைய வருகிறோம் !
விட்டலா . . .
உன் குழந்தைகள் ஆசையோடு வருகிறோம் !
விட்டலா . . .
ஒன்றும் அறியாத முட்டாள்கள் வருகிறோம் !
விட்டலா . . .
பக்தியை அனுபவிக்க வருகிறோம் !
விட்டலா . . .
உன் தரிசனம் எங்களுக்கு தருவாய் !
விட்டலா . . .
உனது பண்டரீபுரத்தில் நடக்க அனுமதி தா !
விட்டலா . . .
உன் பக்தர்களின் கூட்டத்தில் இடம் தா !
விட்டலா . . .
எங்கள் இதயத்தில் நீ வர நாங்கள் வருகிறோம் !
விட்டலா . . .
எங்கள் குற்றங்களை மன்னித்துவிடு !
விட்டலா . . .
எங்களுக்கு நல்ல புத்தியைக் கொடு !
விட்டலா . . .
நீ ரசிக்கும் ஒரு பக்தியை எங்களுக்குத் தா !
விட்டலா . . .
துகாராம் போலே நாங்கள் மாற வரம் தா !
விட்டலா . . .
சக்குபாய் போலே உன்னைக் கட்ட கயிறு தா !
விட்டலா . . .
நாமதேவர் போலே உனக்கு
சப்பாத்தி தர அனுமதி தா !
விட்டலா . . .
சிவாஜி போலே உனக்குக்
கைங்கர்யம் செய்ய பலம் தா !
விட்டலா . . .
சோகாமேளர் போலே உனக்கு
அன்னம் தரும் ஆசை தா !
விட்டலா . . .
கானோபாத்ரா போலே உன்
கோயில் மரமாய் நிற்க ஞானம் தா !
விட்டலா . . .
ஞானேஸ்வரர் போலே உன்னை
வசப்படுத்த வைராக்யம் தா !
விட்டலா . . .
கோமாபாய் போலே உனக்கு
ரொட்டி தர மனது தா !
விட்டலா . . .
கோரா கும்பரைப் போலே
உன்னைத் தம்பியாக்க சக்தி தா !
விட்டலா . . .
நீ சந்தோஷப்படும்படி வாழும்
நல்ல எண்ணங்கள் தா !
இத்தனையும் நீ தருவாய் என
உன் அருகில் ஆசையாய் வருகிறோம் !
விட்டலா . . .
நீயே எங்களின் நாயகன் . . .
வருகிறோம் . . .உன்னிஷ்டப்படி !
தருவாய் தரிசனம் . . . ருக்குமாய் இஷ்டப்படி !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக