ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபுர நகரம் புகுதுமின்றே !

Search This Blog

Friday, February 25, 2011

அணுகுமுறை !

ராதேக்ருஷ்ணா

அணுகுமுறை . . .

இன்று பலபேர்
மறந்த ஒரு விஷயம் . . .

சூழ்நிலைக் கைதியாகாமல்
இருப்பதற்கான ஒரே வழி
அணுகுமுறை !

சூழ்நிலை எப்படியிருந்தாலும்
அணுகுமுறையைக் கொண்டே
வெற்றியும் தோல்வியும் !

சரியான அணுகுமுறை
வெற்றியைத் தரும் !
தவறான அணுகுமுறை
தோல்வியைத் தரும் !

தைரியமான அணுகுமுறை
பலம் தரும் !
பயத்தோடு கூடின அணுகுமுறை
பலத்தைக் குறைக்கும் !

தெளிவான அணுகுமுறை
நன்மை தரும் !
குழப்பமான அணுகுமுறை
நன்மையைத் தள்ளிப்போடும் !

   தப்பிக்கும் மனப்பான்மையோடு
சூழ்நிலையை அணுகினால்,
உன்னால் வெல்ல முடியாது !

சூழ்நிலையை சாதகமாக்கிக்
கொண்டு வாழ நினைத்தால்,
உன்னால் வெல்ல முடியும் !

மரங்களும் சூழ்நிலைகளை
சாதகமாக்கிக்கொண்டு வாழ்கின்றன !

விலங்குகளும் சூழ்நிலைகளுக்கு
இரையாகாமல் ஜெயிக்கின்றன !

பறவைகளும் சூழ்நிலைகளுக்குத்
தகுந்தாற்போல் தங்களை மாற்றிக்கொண்டு
வாழ்ந்துகொண்டிருக்கின்றன !

நீயும் தாயின் வயிற்றில் இருந்தபோது,
உன் தாயின் அசைவிற்கு ஏற்ப
அசைந்து வாழ்ந்து பிறந்திருக்கிறாய் !

எத்தனையோ முறை நீயும்
வாழ்வில் பலவித கடினமான
சூழ்நிலைகளை அற்புதமாக
அணுகி வென்றிருக்கிறாய் !

அதனால் முடியும் !
உன்னால் முடியும் !

நீ தோல்வி காணும் போது
எல்லாம் உன் அணுகுமுறை
தவறென்பதை புரிந்துகொள் !

நீ வெற்றி பெறும்போதெல்லாம்
உன் அணுகுமுறை எதுவென்பதை
நன்றாக கவனித்து மனதில்
சரியாகக் குறித்துக்கொள் !

ஒவ்வொரு முறையும் உன்
அணுகுமுறையை நன்றாகக் கவனி !

உன் அணுகுமுறை தான் உன் வாழ்க்கை !

உன் அணுகுமுறை தான் உன் வெற்றி !

உன் அணுகுமுறை தான் உன் ஆனந்தம் !

உன் அணுகுமுறை தான் உன் தோல்வி !

உன் அணுகுமுறை தான் உன் துக்கம் !

உன் அணுகுமுறை தான் உன் பலம் !

உன் அணுகுமுறை தான் உன் பலவீனம் !

உன் அணுகுமுறை தான் உன் ரஹஸ்யம் !

அணுகுமுறைதான் ரஹஸ்யம் !

இனிமேலாவது அணுகுமுறையைக் கவனி . . .


0 comments:

About


Radhekrishna Sath Sangam . . .The Secured Sacred Spiritual Journey towards salvation . . .Founded by HER HOLINESS POOJYA SHREE SHREE AMMA . . .

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP