ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 பிப்ரவரி, 2011

அதைச் செய் !

ராதேக்ருஷ்ணா

பக்தியை அநுபவி . . .

பக்தியை பாரமாக்கிக்கொள்ளாதே . . .

பக்தியை ரசி . . .

 பக்தி என்பது நம்பிக்கை . . .
 நீ சந்தோஷமாக வாழவே பக்தி !
உன் மனதில் என்றும் அவநம்பிக்கை
வராமல் இருக்கவே பக்தி !

 உனக்கு நாம ஜபம் செய்தால்
நல்ல நம்பிக்கை வருகிறதா ?
அப்பொழுது அதைச் செய்து
பக்தியை அனுபவி !

உனக்கு கோயிலுக்குச் சென்று,
ப்ரார்த்தனை செய்தால்
நல்ல நம்பிக்கை வருகிறதா ?
அப்பொழுது அதைச் செய்து
பக்தியை அனுபவி !

உனக்கு ஸ்லோகங்களைச் சொன்னால்
நல்ல நம்பிக்கையும் பலமும் வருகிறதா ?

அப்பொழுது அதைச் செய்து
பக்தியை அனுபவி !

உனக்கு பஜனை செய்தால்
நம்பிக்கையும், சமாதானமும் கிடைக்கிறதா ?

அப்பொழுது அதைச் செய்து
பக்தியை அனுபவி !

 உனக்கு சத்சங்கம் கேட்டால்
தைரியமும், தெளிவும் உண்டாகிறதா ?

அப்பொழுது அதைச் செய்து
பக்தியை அனுபவி !

உனக்கு கோயிலில் கைங்கர்யம் செய்தால்,
தெய்வ சான்னித்தியம் புரிகிறதா ?

அப்பொழுது அதைச் செய்து
பக்தியை அனுபவி !

உனக்குப் பக்தர்களுடன் இருந்தால்
பக்தி நன்றாய் வருகிறதா ?

அப்பொழுது அதைச் செய்து
பக்தியை அனுபவி !

உனக்கு வீட்டில் சிறிது நேரம்
பூஜை செய்தால் மனது லேசாகிறதா ?

அப்பொழுது அதைச் செய்து
பக்தியை அனுபவி !

உனக்கு ஸ்லோகங்களைக் கற்றுக்கொண்டால்,
தெய்வ நம்பிக்கை அதிகமாகிறதா ?

அப்பொழுது அதைச் செய்து
பக்தியை அனுபவி !

உனக்கு சிறிது நேரம் தியானத்தில்
அமர்ந்தால், நிம்மதி கிடைக்கிறதா ?

அப்பொழுது அதைச் செய்து
பக்தியை அனுபவி !

உனக்கு பக்தர்களின் சரித்திரங்களை
படித்தால், பகவான் புரிகின்றானா ?

அப்பொழுது அதைச் செய்து
பக்தியை அனுபவி !
  
இது போல் பல வழிகள் உண்டு . . . 

ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிடாதே !

எந்தக் காரணம் கொண்டும்,
நீ செய்யும் காரியத்திலோ,
அனுபவிக்கும் பக்தியிலோ,
அஹம்பாவம் மட்டும் வரக்கூடாது !

நீ செய்யும் பக்திதான் உயர்ந்தது என்று
எண்ணிவிடாதே !

உன் பக்தியை எல்லோரும் கொண்டாடவேண்டும்
என்று எதிர்பார்க்காதே !

நீ பக்தியை அநுபவி !
அதற்கு மட்டுமே உனக்கு அதிகாரம் உண்டு !

அதைச் செய் !
அதை மட்டுமே செய் !


 




0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP