உன் குழந்தையே ! ! !
ராதேக்ருஷ்ணா
க்ருஷ்ணா !
நான் எத்தனை தவறுகள்
செய்தாலும் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் எவ்வளவு மோசமானவனாக
இருந்தாலும் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் உலகின் மோசமான பாபியாகவே
வாழ்ந்தாலும் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் அறிவேயில்லாத முட்டாளாக
இருப்பினும் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் உன்னை நம்பவே
இல்லையென்றாலும் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் உன்னை கேவலமாகவே
நினைத்தாலும் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் காமப் பிசாசாகவே
இருந்தாலும் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
எனக்கு வாழத் தெரியாவிட்டாலும்
உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் எல்லாவிதத்திலும் தண்டமாக
இருக்கின்றேன்; எனினும் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் கடமைகளிலுருந்து தவறின
ஒழுக்கங்கெட்டவனாயினும் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் பொறாமை அரக்கனாகவே
இருந்தாலும் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் அஹம்பாவ ராக்ஷசனானாலும்
நிச்சயம் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் சோம்பேறிகளின் ராஜனாக இருந்தாலும்
என்றும் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் எல்லாவிதத்திலும் குறை உடையவன் !
நீயோ துளியும் குறையில்லாதவன் !
இருந்தாலும் நான் உன் குழந்தையே !
நான் உன் குழந்தை ! ! !
இது ஒன்று தான் என் பலம் ! ! !
இது மட்டுமே எனக்கு சமாதானம் ! ! !
இதை நம்பியே நான் வாழ்கிறேன் . . .
இந்தக் குழந்தையைக் காப்பாற்று !
எல்லா சமயங்களிலும் காப்பாற்று !
எல்லா இடங்களிலும் காப்பாற்று !
எல்லா விஷயங்களிலும் காப்பாற்று !
எல்லோரிடமிருந்தும் காப்பாற்று !
என்றும் காப்பாற்று !
முதலில் என்னிடமிருந்து
என்னைக் காப்பாற்று . . .
உன் குழந்தையைக் காப்பாற்று ! ! !
எனக்கு பக்தியில்லை !
நான் ஒழுங்காக நாம ஜபம் செய்வதில்லை !
எனக்கு கர்ம யோகம் புரியவில்லை !
நான் ஆத்மா என்ற சிந்தனையில்லை !
எனக்கு உன்னைவிட்டால் கதியுமில்லை !
அதனால் க்ருஷ்ணா !
உன்னைத் தவிர யார் இந்தக் குழந்தையை
ஏற்றுக்கொள்வார்கள் ? ? ?
நீயே சொல் . . .
அதனால் நீயே உன் குழந்தையைக் காப்பாற்று !
க்ருஷ்ணா !
நான் எவ்வளவு மோசமானவனாக
இருந்தாலும் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் உலகின் மோசமான பாபியாகவே
வாழ்ந்தாலும் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் அறிவேயில்லாத முட்டாளாக
இருப்பினும் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் உன்னை நம்பவே
இல்லையென்றாலும் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் உன்னை கேவலமாகவே
நினைத்தாலும் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் காமப் பிசாசாகவே
இருந்தாலும் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
எனக்கு வாழத் தெரியாவிட்டாலும்
உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் எல்லாவிதத்திலும் தண்டமாக
இருக்கின்றேன்; எனினும் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் கடமைகளிலுருந்து தவறின
ஒழுக்கங்கெட்டவனாயினும் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் பொறாமை அரக்கனாகவே
இருந்தாலும் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் அஹம்பாவ ராக்ஷசனானாலும்
நிச்சயம் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் சோம்பேறிகளின் ராஜனாக இருந்தாலும்
என்றும் உன் குழந்தையே !
க்ருஷ்ணா !
நான் எல்லாவிதத்திலும் குறை உடையவன் !
நீயோ துளியும் குறையில்லாதவன் !
இருந்தாலும் நான் உன் குழந்தையே !
நான் உன் குழந்தை ! ! !
இது ஒன்று தான் என் பலம் ! ! !
இது மட்டுமே எனக்கு சமாதானம் ! ! !
இதை நம்பியே நான் வாழ்கிறேன் . . .
இந்தக் குழந்தையைக் காப்பாற்று !
எல்லா சமயங்களிலும் காப்பாற்று !
எல்லா இடங்களிலும் காப்பாற்று !
எல்லா விஷயங்களிலும் காப்பாற்று !
எல்லோரிடமிருந்தும் காப்பாற்று !
என்றும் காப்பாற்று !
முதலில் என்னிடமிருந்து
என்னைக் காப்பாற்று . . .
உன் குழந்தையைக் காப்பாற்று ! ! !
எனக்கு பக்தியில்லை !
நான் ஒழுங்காக நாம ஜபம் செய்வதில்லை !
எனக்கு கர்ம யோகம் புரியவில்லை !
நான் ஆத்மா என்ற சிந்தனையில்லை !
எனக்கு உன்னைவிட்டால் கதியுமில்லை !
அதனால் க்ருஷ்ணா !
உன்னைத் தவிர யார் இந்தக் குழந்தையை
ஏற்றுக்கொள்வார்கள் ? ? ?
நீயே சொல் . . .
அதனால் நீயே உன் குழந்தையைக் காப்பாற்று !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக