ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

எனக்கென்ன ?

ராதேக்ருஷ்ணா

யார் பொய் சொன்னால் எனக்கென்ன ?
நான் உண்மையாய் இருந்தால்
எனக்கு நல்லது . . .

யார் திருட்டுத்தனம் செய்தால் எனக்கென்ன ?
நான் நேர்மையாய் இருந்தால்
எனக்கு ஆனந்தம் . . .

யார் என்ன பாவம் செய்தால் எனக்கென்ன ?
நான் பாவம் செய்யாதவரை
எனக்கு நிம்மதி . . .

யார் சோம்பேறியாய் இருந்தால் எனக்கென்ன ?
நான் சுறுசுறுப்பாய் இருந்தால்
என் வாழ்வில் வெல்வேன் . . .

யார் யாரைப் பற்றி குற்றம் சொன்னால் எனக்கென்ன ?
நான் யாரையும் குற்றம் சொல்லாதவரை
என் மனது சமாதானமாக இருக்கும் . . .

யார் கடமையில் தவறினால் எனக்கென்ன ?
நான் என் கடமையை ஒழுங்காகச் செய்தால்
என் வாழ்க்கை சிறக்கும் . . .

யார் பக்தி செய்யாவிட்டால் எனக்கென்ன ?
நான் உண்மையான பக்தி செய்தால்
எனக்கு க்ருஷ்ணன் கிடைப்பான் . . .

யாருக்கு அஹம்பாவம் இருந்தால் எனக்கென்ன ?
எனக்கு அஹம்பாவம் வராதவரை
எனக்கு தொந்தரவில்லை . . .

யார் எப்படி வாழ்ந்தால் எனக்கென்ன ?
நான் உருப்படியாக வாழ்ந்தால்,
என் க்ருஷ்ணன் சந்தோஷப்படுவான் . . .

யார் துரோகம் பண்ணால் எனக்கென்ன ?
நான் யாருக்கும் துரோகம் நினைக்காத வரை
எனக்கு நிம்மதியாய் தூக்கம் வரும்  . . .

யார் ஓடிப் போனால் எனக்கென்ன ?
நான் பிரச்சனைகளைக் கண்டு ஓடாதவரை
எல்லாவற்றையும் ஜெயிப்பேன் . . .

யார் ஏமாற்றினால் எனக்கென்ன ?
நான் அடுத்தவரை ஏமாற்றாதவரை,
என் வாழ்வில் தோல்வியில்லை . . .

யார் கேவலப்படுத்தினால் எனக்கென்ன ?
என் க்ருஷ்ணன் என்னைக் கேவலமாக
நினைக்காதபடி  நான் வாழ்ந்தால் உத்தமம் . . .

இவையெல்லாம் எனக்கு என் க்ருஷ்ணன்
சொன்ன ரஹஸ்யங்கள் . . .

நன்மையும், தீமையும் எனக்கு
யாரும் தர முடியாது . . .

அதனால் நான் தான் சரியாகவேண்டும் . . .

நான் சரியானால் என் வாழ்க்கை நன்றாயிருக்கும் !

நான் சரியாகாத வரை,
என் வாழ்க்கை சரியாகாது ! ! !

என்னைச் சரி செய்யாமல்,
அடுத்தவரைப் பற்றி பேசுவதால் எனக்கென்ன ?

என்னைச் சரி  செய்யாமல்,
அடுத்தவரை குறை கூறுவதால் எனக்கென்ன ?

நான் சரியாக ஆகும் வரை ஓயமாட்டேன் . . .

நான் சரியானால் எல்லாம் சரியாகும் !

இதுவே என் தாரக மந்திரம் !

நான் சரியானால் எல்லாம் சரியாகும் !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP