ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 பிப்ரவரி, 2011

நிம்மதி தா . . .

ராதேக்ருஷ்ணா


ஹே க்ருஷ்ணா !
 என் மனதின் காயங்கள்
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா ! 
என் மனதின் வலி
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா ! 
என் மனதின் துக்கம்
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா ! 
என் மனதின் ஓட்டங்கள்
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா ! 
என் மனதின் ஆழம்
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா ! 
என் மனதின் உண்மை
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா ! 
என் மனதின் ஏக்கங்கள்
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா ! 
என் மனதின் ஏமாற்றங்கள்
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா ! 
என் மனதின் வெறுமை
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா ! 
என் மனதின் பாரம்
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா ! 
என் மனதின் தேவை
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா ! 
என் மனதின் அழுகை
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா ! 
என் மனதின் கோபம்
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா ! 
என் மனதின் அன்பு
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா !
என் மனதின் ரஹஸ்யங்கள்
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா !
என் மனதின் பயம்
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா !
என் மனதின் எதிர்பார்ப்புகள்
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா !
என் மனதின் குமுறல்கள்
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா !
என் மனதின் கலவரங்கள்
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா !
என் மனதின் துடிப்பு
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா !
என் மனதின் சந்தேகங்கள்
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா !
என் மனதின் தவிப்பு
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா !
என் மனதின் மென்மை
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா !
என் மனதின் தயக்கங்கள்
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா !
என் மனதின் தீவிரம்
உனக்குத் தெரியும் !

ஹே க்ருஷ்ணா !
என் மனதை
உனக்குத் தெரியும் !

உனக்கு மட்டுமே தெரியும் !
மற்றவருக்கு என் மனதைப் பற்றி
பெரிய கவலையில்லை !

அதனால் என் மனதை
உன்னிடமே தருகின்றேன் . . .

ஹே க்ருஷ்ணா !
அதை எடுத்துக்கொண்டு
எனக்கு நிம்மதி தா . . .

நிம்மதி தா . . .
நிம்மதி தா . . .
நிம்மதி தா . . .

என் வாழ்வில் இதுவாவது
எனக்கு மிஞ்சட்டும் . . .

நீ அதைத் தந்தால்
நான் உனக்கு என்ன தருவேன் ? ? ?

அந்த நிம்மதியையே உனக்கு
அர்ப்பணம் செய்வேன் . . .

ஹே க்ருஷ்ணா . . .
உனக்கு நிம்மதி வேண்டுமென்றால்,
 எனக்கு நீ நிம்மதி தா . . .

உன்னை மிரட்டவில்லை . . .
உரிமையோடு கேட்கவில்லை . . .

பிச்சையாகக் கேட்கிறேன் . . .
கதறி அழுது கேட்கின்றேன் . . .

உன்னைத் தவிர எனக்கு யாருளர் ?

நிம்மதி உன்னிடம் தானே இருக்கிறது . . .

அதனால் உன்னிடமே கேட்கின்றேன் . . .

நிம்மதி தா . . .க்ருஷ்ணா . . .நிம்மதி தா ...

  
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP