ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Monday, March 12, 2012

ஆஹா . . .ஆஹா. . . ஆஹா . . .

ராதேக்ருஷ்ணா

ஆராவமுதா . . .
ஏனடா இப்படிப் படுத்திருக்கிறாய் !

சார்ங்கபாணி . . .
எத்தனை அழகாகப் படுத்திருக்கிறாய் !

குடந்தை அழகா . . .
குழந்தை போலே படுத்திருக்கிறாய் !

கோமளவல்லி நாதா . . .
தலை தூக்கி சுகமாய் படுத்திருக்கிறாய் !

திவ்யப்ரபந்தம் தந்த நாயகா . . .
என்னைப் படுத்தவே படுத்திருக்கிறாய் !

நாதமுனி ப்ரியா . . .
ஆதிசேஷனின் மேல் படுத்திருக்கிறாய் !

செந்தாமரைப் பாதனே . . .
  நீ வாழ்க . . .

கிடந்தவாறு பேசும் அற்புதமே . . .
நீ வாழ்க . . .


கும்பகோணத்தின் ராஜனே . . .
நீ வாழ்க . . .


நான் உன்னைப் பார்க்காமல்
போனாலும்,நீயே என்னை
உன் பக்கம் இழுத்தாயடா . . .


என் செல்லமே . . .
சத்தியமாய் நீ பக்தரை
பரவசப்படுத்தும் பெருமாள் தான் . . .திருமழிசை ஆழ்வாரை
புலம்ப வைத்த சமத்தே . . .


ஸ்வாமி நம்மாழ்வாரை
ஆராவமுதே என பரவசப்படவைத்த
கருமாணிக்கமே . . .


என்னையும் உன் கோஷ்டியில்
வைத்துக்கொண்டாயே . . .
எத்தனை கருணை உனக்கு . . .

ஆஹா . . .ஆஹா. . . ஆஹா . . .


நீயும் அழகு . . .
உன் கோயிலும் அழகு . . .
உன் ஊரும் அழகு . . .
உன் காவிரியும் அழகு . . .
உன் ப்ரபந்தங்களும் அழகு . . .
உன் பக்தர்களும் அழகு . . .
உன் தேவியும் அழகு . . .
உன் யானையும் அழகு . . .
உன் கோபுரமும் அழகு . . .
உன் வீதியும் அழகு . . .


உன்னோடு சேர்ந்த எல்லாமே அழகுதான் . . .
நான் உட்பட . . .


உன்னைப் பார்த்தவுடன்
எழுத ஆரம்பித்த இதை
ஒன்பது நாள் கழித்து
முடிக்க வைத்து,
உன்னை மறவாமல்
நினைக்க வைக்கச் செய்த
உன் லீலையோ அழகோ அழகு ! ! !

0 comments:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP