ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 22 மார்ச், 2012

திருமலையில் சிறை !

ராதேக்ருஷ்ணா


ஸ்ரீநிவாசா . . .
இந்த முறை உன்னை
நன்றாகத் தரிசித்தேன் . . .

உனக்காகக் காத்திருப்பதே
எல்லையில்லா சுகம் . . .

உனக்காகக் காத்திருக்க
எத்தனை கோடி பக்தர்கள் . . .

உன்னைப் பார்க்க
ஒவ்வொருவருக்கும் எத்தனை அவசரம் !

உன்னை நெருங்கும்போது
ஒவ்வொருவருக்கும் எத்தனை ஆனந்தம் !

உன்னைத் தரிசிக்க
ஒவ்வொருவரும் எத்தனை தடவை
கோவிந்தா கோவிந்தா என்று
வாயார மனதார ஜபிக்கிறார்கள் !

உன்னைப் பார்ப்பது
ஒரு நிமிடம் என்றாலும்
அதில் நாங்கள் அடையும்
பலமும் ஆனந்தமும்
சொல்ல வார்த்தையில்லையே !

நீயும் எத்தனை நிதானமாய்
ஒவ்வொருவரையும் விசேஷமாகக்
கடாக்ஷித்து சமாதானம் தருகிறாய் !

எல்லோருக்கும் ப்ரசாதம்
தரும் உன் கருணைக்கு
ஒரு நாளும் முடிவில்லை !

உன்னை நினைத்தபோதெல்லாம்
பார்க்க ஒரு வரம் தா
எனதருமை ஸ்ரீநிவாசா . . .

எப்பொழுதும் உன் பக்தர்களின்
கூட்டத்தில் பலமணி நேரம்
காத்திருந்து உன்னைத் தரிசிக்க
ஒரு வரம் தா ஸ்ரீநிவாசா . . .

 உன்னிடம் வந்துவிட்டாலே
கலியுகத்தில் நாமஜபம்
மட்டுமே சத்தியம் என்பது
புரிகிறதே ஸ்ரீநிவாசா  . . .

உன் ஏழுமலையில் இருக்கும்
ஒவ்வொரு நிமிஷமும்
பக்தி உலகத்தில் மூழ்கியிருக்கும்
பொன்னான நேரமல்லவா
என் சமத்து ஸ்ரீநிவாசா . . .

மலையிலிருந்து என் உடல்
இறங்கி வீட்டிற்கு வந்துவிட்டது . . .

ஆனால் என் மனமோ
திருமலையில் சிறைபட்டுவிட்டது . . .

யார் திருமலைக்குச் செல்கிறீர்களோ,
அங்கே என் மனதைக் கண்டால்
உடனே என்னிடம் வரச்சொல்லுங்கள் !

இல்லையேல் மலையப்பனிடம்
என்னை அங்கே அழைத்துப்
போகச்சொல்லுங்கள் . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP