லட்டு வேண்டுமா ! ! !
ராதேக்ருஷ்ணா
திருமலைக்குச் செல்கிறேன் !
உனக்கு என்ன வேண்டும் ?
யாரிடம் என்ன சொல்லவேண்டும் ?
அலர்மேல்மங்கை அன்னையிடம்
உன் அன்பைச் சொல்லவா ! ! !
திருமலை ஆழ்வாரிடம்
உன் நமஸ்காரத்தைச் சொல்லவா ! ! !
லக்ஷ்மி வராஹ ஸ்வாமியிடம்
உன் தேடலைச் சொல்லவா ! ! !
ஸ்ரீ உறையும் மார்பன் ஸ்ரீநிவாசனிடம்
உன் சரணாகதியைச் சொல்லவா ! ! !
ஸ்வாமி புஷ்கரணியிடம்
உன் தாபத்தைத் தணிக்கச் சொல்லவா ! ! !
மண் பூவை இட்ட குரவநம்பியிடம்
உன் நம்பிக்கையைச் சொல்லவா ! ! !
பிணமெழுப்பின தொண்டைமானிடம்
உன் தீர்மானத்தைச் சொல்லவா ! ! !
குலசேகர ஆழ்வாரிடம் நீ திருமலையில்
படியாய் கிடக்க அனுமதியைக் கேட்கவா ! ! !
திருமலை நம்பிகளிடம்
உன் தாகத்தைச் சொல்லவா ! ! !
முழங்காலிட்டு ஏறின பாஷ்யகாரரிடம்
உன் தேவையைச் சொல்லவா ! ! !
திருமலை அனந்தாழ்வானிடம்
அவரின் கடப்பாறையை தரச்சொல்லவா ! ! !
ஹாத்திராம் பாவாஜீயிடம்
உன் விளையாட்டைச் சொல்லவா ! ! !
என்னவெல்லாம் சொல்லவேண்டுமோ,
அத்தனையும் நீ மனதிற்குள் சொல் . . .
அதை நீ சொன்னதாக
நான் உன் மலையப்பனிடம்
சொல்லிவிடுகிறேன் . . .
லட்டு வாங்கி வரட்டுமா ?
ஸ்ரீநிவாசன் சுவைத்த லட்டு வேண்டுமா ! ! !
விடாமல் ஸ்ரீநிவாசா . . .கோவிந்தா
என்று ஜபித்துக்கொண்டேயிரு . . .
லட்டும் கிடைக்கும் . . .
மோக்ஷமும் கிடைக்கும் . . .
அலர்மேல்மங்காவும் கிடைப்பாள் !
ஸ்ரீ ஸ்ரீநிவாசனும் கிடைப்பான் !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக