உத்திரமேரூர் . . .
ராதேக்ருஷ்ணா
இன்று நான் அடைந்தது
அற்புத ஆனந்தம் . . .
யுதிஷ்டிரர் பூஜித்த
சுந்தர வரதனை
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
அர்ஜுனன் பூஜித்த
அச்யுத வரதனை
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
நகுலன் பூஜித்த
அனிருத்த வரதனை
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
சகதேவன் பூஜித்த
கல்யாண வரதனை
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
பீமன் பூஜித்த
வைகுண்ட வரதனை
முதல் மாடியில்
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
அர்ஜுனனுக்கு உபதேசித்த
க்ருஷ்ணனை அவனோடு
முதல் மாடியில்
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
ப்ரஹ்லாத வரதனான
யோக நரசிம்மனை
முதல் மாடியில்
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
அழகாய் உபதேசிக்கும்
லக்ஷ்மி வராஹ ஸ்வாமியை
முதல்மாடியில்
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
தலைக்கும் கைக்கும்
தலையணையை வைத்துப்
படுத்திருக்கும் அரங்கநாதனை
இரண்டாவது மாடியில்
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
முதல்முதலாக
திருமண் சகிதமான சிவபெருமானை
அரங்கனின் அருகில்
இரண்டாவது மாடியில்
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
கங்கையும் யமுனையும்
வாயில் காப்பவர்களாக இருக்க
மார்கண்டேயரின் தலையில் கைவைத்து
அன்பாய் ஆசிர்வதிக்கும் அரங்கனை
இரண்டாவது மாடியில்
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
1000 பிராம்மணர்கள் வேதம் ஓதிய
உத்திரமேரூரில் ஆனந்தமாய்
வீற்றிருக்கும் ஆனந்தவல்லித் தாயாரை
உத்திரமேரூரில் தரிசித்தேன் !
நவமூர்த்திகளை நன்றாகத்
தரிசித்த சந்தோஷத்தில்
நிம்மதியாய் வந்தேன் . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக