ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

646. ஆடிபெருக்கு

ஆடிப்பெருக்கு...

எல்லா மங்கலங்களும் 
பெருக அருள் செய் காவேரித்தாயே !

உள்ளமெல்லாம் அன்பு
பெருக அருள் செய்
காவேரித்தாயே !

பக்தி ஞான வைராக்கியம்
பெருக அருள் செய்
காவேரித்தாயே !

ஆரோக்கியமும் வலிவும்
பெருக அருள் செய்
காவேரித்தாயே !

தேசபக்தியும், மனிதநேயமும்
பெருக அருள் செய்
காவேரித்தாயே !

முதியோர்களுக்கு மரியாதை
பெருக அருள் செய்
காவேரித்தாயே !

இளையோர் பக்குவம்
பெருக அருள் செய்
காவேரித்தாயே !

விவசாயமும் வளமும்
பெருக அருள் செய்
காவேரித்தாயே !

பெண்களின் பாதுகாப்பு
பெருக அருள் செய்
காவேரித்தாயே !

ஆண்களின் அரவணைப்பு
பெருக அருள் செய்
காவேரித்தாயே !

குழந்தைகளின் குதூகலம்
பெருக அருள் செய்
காவேரித்தாயே !

எல்லாத் தொழில்களும்
பெருக அருள் செய்
காவேரித்தாயே !

கலைகளெல்லாம்
பெருக அருள் செய்
காவேரித்தாயே !

கோமாதாவின் சேவை
பெருக அருள் செய்
காவேரித்தாயே !

ஜீவராசிகள் வாழ்வு
பெருக அருள் செய்
காவேரித்தாயே !

இந்துக்கள் ஒற்றுமை
பெருக அருள் செய்
காவேரித்தாயே !

நல்லனவெல்லாம் 
பெருக அருள் செய்
காவேரித்தாயே !

எங்கும் திருவருள்
பெருக அருள் செய்
காவேரித்தாயே !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP