ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 26 அக்டோபர், 2011

தீபாவளி வாழ்த்துக்கள் . . .

ராதேக்ருஷ்ணா

தீபாவளி . . .

இந்த தீபாவளி எல்லோருக்கும்
விதவிதமான தீபாவளி . . .



சிஷ்யர்களுக்கு
அனுக்ரஹ தீபாவளியாகட்டும் . . .

பயந்தாக்கொள்ளிகளுக்கு
தைரிய தீபாவளியாகட்டும் !

பெற்றோர்களுக்கு
பொறுப்பு தீபாவளியாகட்டும் !

குழந்தைகளுக்கு
குதூகல தீபாவளியாகட்டும் !

அஹம்பாவிகளுக்கு
வினய தீபாவளியாகட்டும் !

வியாபாரிகளுக்கு
லாப தீபாவளியாகட்டும் !

தாய்மார்களுக்கு
வாஞ்சை தீபாவளியாகட்டும் !

தந்தைமார்களுக்கு
கடமை தீபாவளியாகட்டும் !

ஏழைகளுக்கு
நீங்காத செல்வ தீபாவளியாகட்டும் !

பணக்காரர்களுக்கு
நிம்மதி தீபாவளியாகட்டும் !

வியாதியஸ்தருக்கு
ஆரோக்கிய தீபாவளியாகட்டும் !


முதியோருக்கு
மரியாதை தீபாவளியாகட்டும் !

ஆதரவற்றோருக்கு
அன்பு மயமான தீபாவளியாகட்டும் !

படிக்கும் குழந்தைகளுக்கு
அறிவு தீபாவளியாகட்டும் !

படிப்பற்றவருக்கு
அனுபவ தீபாவளியாகட்டும் !

குடும்பத்தினருக்கு
கொண்டாட்ட தீபாவளியாகட்டும் !


புதுமண தம்பதியருக்கு
தலை தீபாவளியாகட்டும் !

ப்ரும்மசாரிகளுக்கு
வைராக்ய தீபாவளியாகட்டும் !

வயது வந்த பெண்களுக்கு
ஜாக்கிரதை தீபாவளியாகட்டும் !

ஊனமுற்றோருக்கு
உற்சாக தீபாவளியாகட்டும் !

முட்டாள்களுக்கு
ஞான தீபாவளியாகட்டும் !

முயல்பவருக்கு
திருவினை தீபாவளியாகட்டும் !

இந்துக்களுக்கு
வீர தீபாவளியாகட்டும் !



பாரதத்திற்கு
சுதந்திர தீபாவளியாகட்டும் !

உலகத்திற்கு
சாந்தி தீபாவளியாகட்டும் !

எல்லோருக்கும்
நிம்மதி தீபாவளியாகட்டும் !



தீபாவளி வாழ்த்துக்கள் . . .

Read more...

செவ்வாய், 25 அக்டோபர், 2011

நானின்றி அவனில்லை . . .

ராதேக்ருஷ்ணா

தீபாவளி . . .
உற்சவ தீபாவளி . . .
அனந்தனுக்கு தீபாவளி . . .
அனந்தபுர ராஜனுக்கு தீபாவளி . . .

அனந்தபுரி அழகன்
விசேஷமான அலங்காரத்தில்
ஆனந்தமாய் பவனி வருகிறான் !

அனந்தபுரி ராஜன்
விண்ணோரும் மண்ணோரும்
வியக்க பவனி வருகிறான் !

அனந்தபுரி நாயகன்
பக்தர்களின் ப்ரேம வெள்ளத்தில்
உற்சாகமாய் பவனி வருகிறான் !


அனந்தபுரியின் ஆனந்தன்
தீப ஒளியில் தீபாவளி இரவில்
ஜொலிப்பாய் பவனி வருகிறான் !


அனந்தபுரி அன்பன்
திருவிதாங்கூர் ராஜனோடு
அன்பாய் பவனி வருகிறான் !


அனந்தபுரி தேவாதி தேவன்
அனல் விழி, ப்ரஹ்லாத நரசிம்மரோடு
நன்றாக பவனி வருகறான் !

அனந்தபுரியின் செல்லம்
குறும்பன் க்ருஷ்ணனோடு
குதூகலமாய் பவனி வருகிறான் !


அனந்தபுரியின் ரக்ஷகன்
சப்தரிஷிகளின் வேதசப்தத்தோடு
ரமணீயமயமாய் பவனி வருகிறான் !



அனந்தபுரியின் காதலன்
கோபாலவல்லியின் மனதோடு
காதலில் பவனி வருகிறான் !


அவனன்றி நானில்லை . . .
நானின்றி அவனில்லை . . .

Read more...

திங்கள், 24 அக்டோபர், 2011

காரணம் யாரோ ? ? ?

ராதேக்ருஷ்ணா


கண்களிலே ஆனந்த பாஷ்பம் . . .
காரணம் யாரோ ? ? ?

உடலெல்லாம் மயிர்கூச்சல் . . .
காரணம் யாரோ ? ? ?

மனம் முழுக்க சந்தோஷம் . . .
காரணம் யாரோ ? ? ?

நினைக்க நினைக்க இனிக்கிறது . . .
காரணம் யாரோ ? ? ?

வாயெல்லாம் சிரிப்பு . . .
காரணம் யாரோ ? ? ?

வார்த்தைகளிலெல்லாம் குதூகலம் . . .
காரணம் யாரோ ? ? ?

நடையெல்லாம் துள்ளல் . . .
காரணம் யாரோ ? ? ?

பேச்செல்லாம் ஆனந்தமயம் . . .
காரணம் யாரோ ? ? ?

காரியங்களிலெல்லாம் நம்பிக்கை . . .
காரணம் யாரோ ? ? ?

வாழ்வெல்லாம் பரமானந்தம் . . .
காரணம் யாரோ ? ? ?

சொல்லமுடியாத சுகம் . . .
காரணம் யாரோ ? ? ?

மறைக்கமுடியாத அனுபவம் . . .
காரணம் யாரோ ? ? ?

காரணம் யாரோ . . .?

என் பத்மநாபனைத் தவிர
வேறு யார்தான் காரணம் . . .

என் காதலா . . .
என் அழகா . . .
என் கணவா . . .

பத்மநாபா . . .

என்றும் உன் கோபாலவல்லி . . .



Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP