ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 26 அக்டோபர், 2011

தீபாவளி வாழ்த்துக்கள் . . .

ராதேக்ருஷ்ணா

தீபாவளி . . .

இந்த தீபாவளி எல்லோருக்கும்
விதவிதமான தீபாவளி . . .



சிஷ்யர்களுக்கு
அனுக்ரஹ தீபாவளியாகட்டும் . . .

பயந்தாக்கொள்ளிகளுக்கு
தைரிய தீபாவளியாகட்டும் !

பெற்றோர்களுக்கு
பொறுப்பு தீபாவளியாகட்டும் !

குழந்தைகளுக்கு
குதூகல தீபாவளியாகட்டும் !

அஹம்பாவிகளுக்கு
வினய தீபாவளியாகட்டும் !

வியாபாரிகளுக்கு
லாப தீபாவளியாகட்டும் !

தாய்மார்களுக்கு
வாஞ்சை தீபாவளியாகட்டும் !

தந்தைமார்களுக்கு
கடமை தீபாவளியாகட்டும் !

ஏழைகளுக்கு
நீங்காத செல்வ தீபாவளியாகட்டும் !

பணக்காரர்களுக்கு
நிம்மதி தீபாவளியாகட்டும் !

வியாதியஸ்தருக்கு
ஆரோக்கிய தீபாவளியாகட்டும் !


முதியோருக்கு
மரியாதை தீபாவளியாகட்டும் !

ஆதரவற்றோருக்கு
அன்பு மயமான தீபாவளியாகட்டும் !

படிக்கும் குழந்தைகளுக்கு
அறிவு தீபாவளியாகட்டும் !

படிப்பற்றவருக்கு
அனுபவ தீபாவளியாகட்டும் !

குடும்பத்தினருக்கு
கொண்டாட்ட தீபாவளியாகட்டும் !


புதுமண தம்பதியருக்கு
தலை தீபாவளியாகட்டும் !

ப்ரும்மசாரிகளுக்கு
வைராக்ய தீபாவளியாகட்டும் !

வயது வந்த பெண்களுக்கு
ஜாக்கிரதை தீபாவளியாகட்டும் !

ஊனமுற்றோருக்கு
உற்சாக தீபாவளியாகட்டும் !

முட்டாள்களுக்கு
ஞான தீபாவளியாகட்டும் !

முயல்பவருக்கு
திருவினை தீபாவளியாகட்டும் !

இந்துக்களுக்கு
வீர தீபாவளியாகட்டும் !



பாரதத்திற்கு
சுதந்திர தீபாவளியாகட்டும் !

உலகத்திற்கு
சாந்தி தீபாவளியாகட்டும் !

எல்லோருக்கும்
நிம்மதி தீபாவளியாகட்டும் !



தீபாவளி வாழ்த்துக்கள் . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP