நானின்றி அவனில்லை . . .
ராதேக்ருஷ்ணா
தீபாவளி . . .
உற்சவ தீபாவளி . . .
அனந்தனுக்கு தீபாவளி . . .
அனந்தபுர ராஜனுக்கு தீபாவளி . . .
அனந்தபுரி அழகன்
விசேஷமான அலங்காரத்தில்
ஆனந்தமாய் பவனி வருகிறான் !
அனந்தபுரி ராஜன்
விண்ணோரும் மண்ணோரும்
வியக்க பவனி வருகிறான் !
அனந்தபுரி நாயகன்
பக்தர்களின் ப்ரேம வெள்ளத்தில்
உற்சாகமாய் பவனி வருகிறான் !
அனந்தபுரியின் ஆனந்தன்
தீப ஒளியில் தீபாவளி இரவில்
ஜொலிப்பாய் பவனி வருகிறான் !
அனந்தபுரி அன்பன்
திருவிதாங்கூர் ராஜனோடு
அன்பாய் பவனி வருகிறான் !
அனந்தபுரி தேவாதி தேவன்
அனல் விழி, ப்ரஹ்லாத நரசிம்மரோடு
நன்றாக பவனி வருகறான் !
அனந்தபுரியின் செல்லம்
குறும்பன் க்ருஷ்ணனோடு
குதூகலமாய் பவனி வருகிறான் !
அனந்தபுரியின் ரக்ஷகன்
சப்தரிஷிகளின் வேதசப்தத்தோடு
ரமணீயமயமாய் பவனி வருகிறான் !
அனந்தபுரியின் காதலன்
கோபாலவல்லியின் மனதோடு
காதலில் பவனி வருகிறான் !
அவனன்றி நானில்லை . . .
நானின்றி அவனில்லை . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக