ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

திருமோகூர் . . .


ராதேக்ருஷ்ணா


மார்கபந்து . . .
வழித்துணைவன் . . .

மார்கம் இல்லாமல்
அலைபவருக்கு
மார்கபந்துவே கதி . . .

மார்கத்தை விட்டு
வழிதவறினவருக்கு
மார்கபந்துவே கதி . . .

மார்கம் புரியாமல்
தவிப்பவருக்கு
மார்கபந்துவே கதி . . .

மார்கம் தெரிய,
மார்கம் புரிய,
மார்கத்திற்கு பந்து கிடைக்க,
மார்கபந்துவை அனுபவிக்க
திருமோகூர் வாராய் பிள்ளாய் . . .

பக்தி மார்கம் தெளிவாய் புரிய
திருமோகூர் வாராய் பிள்ளாய் . . .

ஞான மார்கத்தில் சுகமாய் பயணிக்க
திருமோகூர் வாராய் பிள்ளாய் . . .

வைராக்கியத்தோடு மார்க்கம் அமைய
திருமோகூர் வாராய் பிள்ளாய் . . .

குருவின் மார்கத்தில் செல்ல
திருமோகூர் வாராய் பிள்ளாய் . . .

சரணாகதி மார்கத்தைப் பின்பற்ற
திருமோகூர் வாராய் பிள்ளாய் . . .

திருமோகூர் . . .
ஊர் பெயரே எத்தனை அழகு . . .

பெருமாள் திருநாமமோ
மார்கபந்து என்னும்
வழித்துணை பெருமாள் !

இன்னொரு திருநாமமோ
காளமேகப் பெருமாள் !

மழை தரும் மேகம் போன்று
கருணை மழையைக் கொட்ட
நின்றிருக்கும் காளமேகப் பெருமாள் !

நாங்கள் போயிருந்த சமயமோ
காள மேகங்கள் கர்ஜித்து
இவரே உனக்கு வழித்துணைவன்
என்று பறை சாற்றினவே . . .

எத்தனை பெரிய கோயில் . . .
எத்தனை அழகான மார்கபந்து . . .

அழகான ப்ரார்த்தனா சயன ரங்கன் !
திருவடியில் ஸ்ரீதேவியும் பூதேவியும்
ப்ரார்த்திக்க சயனக்கோலத்தில்
திருப்பாற்கடல் நாதன் சன்னதி !

மோஹினி அவதாரம் எடுக்க
பெருமாள் தீர்மானித்த திருமோகூர் . . .

எல்லோரையும் விட அழகு
எங்கள் மோஹனவல்லித் தாயார் . . .

குங்குமப்பூ அழகி !
மஞ்சள் திருமேனி அழகி !
கருணா கடாக்ஷ அழகி !
 
 நம் மோஹத்தை அழித்து,
பெருமாளிடம் நம்மை மோஹிக்கச்
செய்யும் அழகி மோஹனவல்லி . . .

வைத்த கண்ணை எடுக்கப் பிடிக்கவில்லை !

அற்புத சுதர்சன சக்கரத்தாழ்வாரும்
மோஹம் தருகிறாரே . . .

என் செய்வேன் பிள்ளாய் ? ! ?

திருமோகூர் திவ்யதேசமா . . .
இல்லை . . .
திருமோகூர் மோஹ தேசம் . . .
நம்மை மோஹிக்கப் பண்ணும் தேசம் . . .

நான் போனேன் . . .
மோஹித்துப் போனேன் . . .

மீண்டும் என்று என்
மோஹத்திற்கு மார்கமான பந்துவை
நான் காண்பேன் ? ? ?

என் மோஹனபந்துவை
என்று கண்ணாரக் காண்பேன்  ? ? ?

மார்கம் காட்டும் மார்கபந்துவே,
கருமாணிக்க காளமேகமே,
என் வீட்டு மார்கம் நீ அறிவாயே !
இப்பக்கம் வந்து உன் மோஹமழையை
என் மேல் பெய்வாயா ?

என் மோஹம் தீர மார்கம் செய்வாயா ?

இல்லை ...திருமோகூர் திருமோகூர்
என்று பிதற்றி,
நான் என் குல மார்கத்தை
விட்டு பித்தனாய் அலையச் செய்வாயோ ?

அடியேன் வாழ்க்கையில்
செய்த பெரும் தவறு . . .

திருமோகூர் சென்றது தான் . . .

இல்லையெனில் இப்படி
வெட்கமில்லாமல் என் மோஹத்தை
ஊருக்குச் சொல்வேனா ?

ஐயோ . . .
என் மோஹத்தால்,
மார்கபந்துவின் மீதுள்ள மோஹத்தால்,
வெட்கம் அழிந்தேனே . . .

ஹே பிள்ளாய் !
மார்கபந்துவிடம் இந்த
கோபாலவல்லியின் மார்கத்தைச்
சொல்லி அந்த காளமேகத்தை
இங்கே அனுப்பி வைப்பாயா ?

இல்லையேல் நீயும்
என்னைப் போல்
மார்கபந்துவிடம் மோஹப்பட்டு
மார்கம் மறப்பாயா . . .



 
 

Read more...

சனி, 28 ஏப்ரல், 2012

குணசீலம் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
குணசீலா . . .
 
உனது பக்திக்காகவே
என் வேங்கடபதி காவிரி
ஆற்றங்கரைக்கு வந்தான் . . .
 
குணசீலா . . .
 
உன் பக்தியில் மயங்கி
உன் பூஜைகளை எல்லாம்
சுகமாக ஏற்றான் . . .


குணசீலா . . .

உன் பெயரையே
ஊருக்கும் தந்துவிட்டான்
உன் ப்ரசன்ன வேங்கடாசலபதி . . .


குணசீலம் . . .
குணசீல ரிஷியின் தபோபூமி . . .

வேங்கடவன் ப்ரசன்ன வேங்கடேசனாக
காட்சி தரும் புண்ணியபூமி . . .


பித்தர்களை தெளிய வைக்கும்
காவிரியின் ஆற்றங்கரை பூமி . . .
 
 
ப்ரசன்ன வேங்கடாசலா . . .

என் பித்தத்தையும் தெளியவை !

என் காமப்பித்தையும் தெளிய வை !

என் பொறாமைப் பித்தையும் மாற்றிக்காட்டு !

என் அஹங்காரப் பித்தையும் அழித்துப்போடு !

என் சந்தேகப் பித்தையும் கொன்று போடு !

எனது குழப்பப் பித்தையும் தெளிய வை !
 
என் எல்லாப் பித்தையும் மாற்றி
என்னை உன் பித்தனாய் மாற்று . . .
 
எனக்கு எல்லாப் பித்தும்
தலையேறியிருக்கிறது . . .
 
உன்னிடம் பித்தேற வை . . .
 
குணசீலா . . .
உன்னைப் போல் என்னையும்
வேங்கடவனின் பித்தனாக்கு . . .
 
குணசீலா . . .உன் அருகில் ஒரு இடம் தா !
 
என் மனதில் உன் வேங்கடவன்
வாழ ஒரு வரம் தா . . .
 
நான் என்று பித்தனாவேன் ? ! ?
 
பித்தனாய் குணசீலத்தில் என்று
அடைக்கலம் புகுவேன் ? ! ?
 
க்ருஷ்ண பித்தனாய் என்று
குணசீலத்தில் திரிவேன் ? ! ?
 
 
 
 

Read more...

புதன், 25 ஏப்ரல், 2012

எனக்குப் பரிசு !

ராதேக்ருஷ்ணா
 
 
என் ராமானுஜா !
 நீயே எனக்கு கதி . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு பலம் . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு துணை . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு வழி . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு குரு . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு நண்பன் . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு செல்வம் . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு சொந்தம் . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு ராஜா . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு கல்வி . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு சொத்து . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு தெய்வம் . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்குக் குழந்தை . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு எஜமானன் . . .
 
என் ராமானுஜா !
நீயே எனக்கு ஆதாரம் . . .
 
என் ராமானுஜா !
நீயே எனது வாழ்க்கை . . .
 
என் ராமானுஜா !
நீயே என் காதல் . . .
 
என் ராமானுஜா !
 நீயே எனக்கு சர்வம் . . .
 
என் ராமானுஜா . . .
உன்னை ஸ்ரீரங்கத்தில் பார்த்துவிட்டேன் !
 
என் ராமானுஜா . . .
நீ என்னோடு இருப்பாய் !
 
என் ராமானுஜா . . .
நீ தான் எனது ரக்ஷகன் !
 
ராமானுஜா . . .
தயிர்காரிக்கு மோக்ஷம் தந்த
கருணை தெய்வமே !
 
ராமானுஜா . . .
பெண்ணிடம் மயங்கியிருந்த
பிள்ளை உறங்காவில்லியைக்
காத்த நாயகனே !
 
ராமானுஜா . . .
ஊமைக்கு உன் திருவடியைத்
தந்த உத்தம ஆசார்யனே !
 
இந்த கோபாலவல்லிக்கும் தா . . .
 
உன்னைத் தா . . .
உன் பாதுகையைத் தா . . .
உன் மனதைத் தா . . .
உன் வீரத்தைத் தா . . .
உன் பலத்தைத் தா . . .
உன் பக்தியைத் தா . . .
உன் வைராக்கியத்தைத் தா . . .
உன் ஞானத்தைத் தா . . .
 
 ஒரு கைங்கர்யம் தா . . .
 
வடுகநம்பியாய் நான் மாறவேண்டும் !
உனக்கு பாலமுது தரவேண்டும் . . .
 
கிடாம்பி ஆச்சானாக நான் மாறவேண்டும் !
உனக்குத் தளிகை பண்ணவேண்டும் . . .
 
கூரத்தாழ்வானாய் நான் மாறவேண்டும் !
உனக்காக பரமபதம் செல்லவேண்டும் . . .
 
ராமானுஜா . . .
நான் அடியேனாக மாறவேண்டும் . . .
உனக்கு அடியவனாக மாறவேண்டும் . . .
 
உன் பிறந்த நாளைக்கு
நீ எனக்கு தர வேண்டிய பரிசு இதுவே !
 
உன் பிறந்தநாளுக்காகக்
காத்திருக்கிறேன் . . .
 
எனக்குப் பரிசு தா . . .
 
உன் பிறந்தநாள்...
அடியேன் மாறும் நாளாகட்டும் !
 

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP