நீயே சொல் !
ராதேக்ருஷ்ணா
எந்த இடம் மிக உன்னதமானது ?
வைகுண்ட லோகமா ?
சொர்க்க லோகமா ?
பூமியா ?
நரக லோகமா ?
வைகுண்ட லோகத்தில் கவலை இல்லை !
பிரச்சனைகள் இல்லை !
சண்டை இல்லை ! துன்பம் இல்லை !
பயம் இல்லை ! கெட்டவர்கள் இல்லை !
இரவு இல்லை ! விடியல் இல்லை !
பசி இல்லை ! ஆகாரம் இல்லை !
விரோதி இல்லை ! மாயை இல்லை !
மயக்கம் இல்லை ! குழப்பம் இல்லை !
ஆனாலும் பகவானுக்கும் சௌலப்யம் இல்லை !
பக்தனுக்கும் பகவானுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை !
அதனால் வைகுண்ட லோகம் உசத்தி இல்லை !
இந்திரனின் சொர்க்க லோகத்தில்
உடல் சுகம் கொட்டிக் கிடக்கிறது !
ரம்பா உண்டு,ஊர்வசி உண்டு,
ஆடல் பாடல் உண்டு,
அமிழ்தம் உண்டு,
அசுர பயமும் உண்டு!
நிச்சயம் நிரந்தரம் இல்லை !
ஆனாலும் எப்போது வேண்டுமானாலும்
கீழே தள்ளி விடுவார்கள் !
அதுவும் இல்லாமல் நல்லவர்கள்
யாரும் அங்கே இருப்பதில்லை !
உருப்படுவதற்கு வழியும் இல்லை !
அதனால் சொர்க்கமும் தண்டமே!
நரக லோகம் பயங்கரமானது !
தண்டனைகள் மட்டுமே அதன் பிரயோஜனம் !
84 லக்ஷம் விதமான தண்டனைகள் உண்டு!
பாபிகளும், மகாபாபிகளும் உண்டு !
கொடூரம் உண்டு, பயங்கரம் உண்டு,
துன்பம் உண்டு,உடல் வேதனை பல உண்டு,
ஆனால் தண்டனையினால்
நல்ல புத்தி வரும் ! மனித வாழ்வின்
மகிமை புரியும் !
அதனால் நரக லோகம் நல்லது தான் !
பூமிப்பந்து எல்லாம் கலந்த ஒன்று !
பசி உண்டு, பட்டினி உண்டு ,
அன்பு உண்டு,அறுசுவை உணவு உண்டு,
பயம் உண்டு, குழப்பம் உண்டு ,
இரவு உண்டு, விடியல் உண்டு,
சண்டை உண்டு, சமாதானம் உண்டு,
விரோதி உண்டு, நண்பன் உண்டு,
ஜனனம் உண்டு, மரணம் உண்டு,
நல்லது உண்டு, கெடுதல் உண்டு ,
சிரிப்பு உண்டு, அழுகை உண்டு,
வியாதி உண்டு,மருந்து உண்டு,
இளமை உண்டு,முதுமை உண்டு,
அறியாமை உண்டு,அறிவு உண்டு,
எதிர்பார்ப்பு உண்டு,ஏமாற்றம் உண்டு,
பலகீனம் உண்டு,பலம் உண்டு,
கேள்வி உண்டு,பதில் உண்டு,
பிரிவு உண்டு,சேர்த்தி உண்டு,
ஊனம் உண்டு,உதவி உண்டு,
துரோகம் உண்டு,நம்பிக்கை உண்டு,
தவறுதல் உண்டு, நிவர்த்தி உண்டு,
பாவம் உண்டு,பழி உண்டு,
புண்ணியம் உண்டு,
ஏழ்மை உண்டு,பணம் உண்டு,
கஞ்சத்தனம் உண்டு,தானம் உண்டு,
அகம்பாவம் உண்டு, அழிவு உண்டு,
பஞ்சம் உண்டு,வீணடித்தல் உண்டு,
திமிரு உண்டு,கொலை உண்டு,
கொள்ளை உண்டு, பொய் உண்டு,
நல்லவன் உண்டு,கெட்டவன் உண்டு,
இன்னும் என்னென்னவோ உண்டு!!!
இவை இல்லாமல்
கோயில் உண்டு,
புண்ணிய நதிகள் உண்டு,
புராணங்கள் உண்டு,
இதிஹாசங்கள் உண்டு,
அவதாரங்கள் உண்டு,
பக்தர்கள் உண்டு,
சத்குரு உண்டு,
பத்தி உண்டு,
நாம ஜபம் உண்டு,
சத்சங்கம் உண்டு,
சரணாகதி உண்டு,
ஆழ்வார்கள் உண்டு,
ராமானுஜர் உண்டு,
ஆண்டாள் உண்டு,
மத்வர் உண்டு,
இராகவேந்திரர் உண்டு,
கிருஷ்ண சைதன்யர் உண்டு,
மீரா உண்டு,
ஜெயதேவர் உண்டு,
துகாராம் உண்டு,
அன்னமாச்சார்யா உண்டு,
வேதாந்த தேசிகர் உண்டு,
சாக்கு பாய் உண்டு,
இன்னும் பலர் உண்டு !
ராதிகா உண்டு ! கிச்சா உண்டு !
வ்ருந்தாவனம் உண்டு !
பிரேமை உண்டு!
ராசக்ரீடை உண்டு !
குருஜீ அம்மா உண்டு !
தினம் தினம் ஆனந்தவேதம் உண்டு !
இப்போது நீயே சொல் !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக