வாழ்ந்தாலே சந்தோஷம் !
ராதேக்ருஷ்ணா
நீ குந்தியைப் போல்
துக்கத்தை வரமாக
கேட்கவேண்டாம் !
வருகின்ற கஷ்டங்களில்
க்ருஷ்ண அனுக்ரஹத்தை
உணர்ந்தாலே போதும் !
நீ திரௌபதியைப் போல்
அவமானப் பட வேண்டாம் !
அவமானங்களில் க்ருஷ்ணன்
கூட இருக்கின்றான் என்று
மனதில் நம்பிக்கை வைத்தாலே போதும்!
நீ ப்ரஹ்லாதனைப் போல்
பகவானை நிரூபிக்க வேண்டாம் !
எத்தனை பேர் என்ன சொன்னாலும்
உன் க்ருஷ்ணனிடத்தில்
நம்பிக்கை மாறாமலிருந்தாலே போதும் !
நீ துருவன் போலே காட்டிற்குச்
சென்று தவம் செய்ய வேண்டாம் !
நீ இருக்குமிடத்தில் இருந்து கொண்டு
குரு வார்த்தைப்படி நடந்தாலே போதும்!
நீ மீராவைப்போல் விஷத்தைக்
குடிக்கவேண்டாம் !
க்ருஷ்ணனுக்கு எல்லாம்
தெரியுமென்று சமாதானமாக
இருந்தாலே போதும் !
நீ இராமானுஜரைப்போல்
சன்னியாசியாக வேண்டாம் !
பைத்தியக்காரத்தனமான
பேராசை, பிடிவாதங்களை
விட்டாலே போதும் !
நீ மீராவைப்போல் விஷத்தைக்
குடிக்கவேண்டாம் !
க்ருஷ்ணனுக்கு எல்லாம்
தெரியுமென்று சமாதானமாக
இருந்தாலே போதும் !
நீ இராமானுஜரைப்போல்
சன்னியாசியாக வேண்டாம் !
பைத்தியக்காரத்தனமான
பேராசை, பிடிவாதங்களை
விட்டாலே போதும் !
நீ உன் க்ருஷ்ணனை பிடித்துக்கொண்டு,
விடாமல் நாம ஜபம் செய்துகொண்டு,
உன் கடமைகளை பண்ணிக்கொண்டு,
வருவதை ஏற்றுக்கொண்டு
வாழ்க்கையை
ஒழுங்காக
வாழ்ந்தாலே சந்தோஷம் !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக