உன் மனம் !
ராதேக்ருஷ்ணா
உன் மனம் பறந்து கொண்டுதான் இருக்கிறது.
அதை கருடனாக மாற்ற க்ருஷ்ணனிடத்தில் ப்ரார்த்தனை செய் !
உன் மனம் காடாகத்தான் இருக்கிறது.
அதை ப்ருந்தாவனமாக மாற்ற ராதையிடம்
சரணாகதி செய் !
உன் மனம் பாம்பு போல்தான் இருக்கிறது.
அதை ஆதிசேஷனாக மாற்ற
ஸ்வாமி ராமானுஜரிடத்தில் கதறியழுது
ப்ரார்த்தனை செய் !
உன் மனம் ஆடிக்கொண்டுதான்
இருக்கிறது.
அது ஊஞ்சலாக மாறி, அதில்
ராதையும், க்ருஷ்ணனும் ஆடுவதற்கு
கோபிகைகளிடம் வரம் கேள்!
உன் மனம் கல்லாகத்தான் இருக்கிறது!
அதை திருமலையில் படியாகக் கிடக்க
குலசேகர ஆழ்வாரிடத்தில் பக்தியுடன்
விண்ணப்பம் செய் !
உன் மனம் மலையாகத்தான் இருக்கிறது!
அதை கோவர்தனமாக மாற்ற
ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரிடத்தில்
ரகசியமாக ப்ரார்த்தனை செய்!
உன் மனம் பைத்தியமாகத்தான் இருக்கிறது!
அதை க்ருஷ்ண பைத்தியமாக
மாற்ற சுகப்ரும்ம மஹரிஷியிடத்தில்
ப்ரேம பாடம் கற்றுக் கொள் !
உன் மனம் மரமாகத்தான் இருக்கிறது!
அதில் "ராதாக்ருஷ்ணன்" ரூபம் உண்டாக
குருஜீ அம்மாவிடம்
திடமான நம்பிக்கை கொள் !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக