உன் கடமை !
ராதேக்ருஷ்ணா
யாரும் யாருக்காகவும் வருந்தக்கூடாது !
தன்னைப் பற்றி வருந்தவும் அதிகாரம் கிடையாது !
உன்னைப் பற்றி நீ வருந்தினால் உலகின் மிகப்பெரிய
அஹம்பாவியும், முட்டாளும் நீதான் !
உன்னை உனக்குத் தெரியாது !
உன்னை உலகத்துக்குத் தெரியாது !
உனக்கு உலகத்தைத் தெரியாது !
எல்லாவற்றையும் க்ருஷ்ணன் மட்டுமே அறிவான் !
அதனால் அவன் வேலையை நீ செய்ய நினைக்காதே !
நீ உன் வேலையை மட்டும் பார் !
அவன் எல்லோரையும் பார்த்துப் பார்த்து
கவனித்துக் கொள்கின்றான் !
நீ குதிக்காதே ! அமைதியாயிரு !
உன் கடமை கிருஷ்ணனை நம்பி
உன் வேலைகளை மட்டும் செய்வதே !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக