செல்லக் குழந்தை!
ராதேக்ருஷ்ணா
எதையோ நினைத்துப் புலம்பாதே!
யாரையோ நினைத்து அழாதே!
வாழ்க்கையை நினைத்துப் பயப்படாதே!
மனதில் ஆசைவயப்பட்டு உளறாதே!
நினைத்தது நடக்காவிட்டால்
கோபப்படாதே!
நினைக்காதது நடந்துவிட்டால்
நொந்துபோகாதே!
அவமானப்படுத்தினால் கலங்காதே!
ஒதுக்கிவைத்தால் ஓய்ந்துபோகாதே!
மனிதர்களை நினைத்து
உன் வாழ்க்கையை இழக்காதே !
அத்ருஷ்டத்தை நினைத்து
முயற்சியை விடாதே!
கைரேகையை நம்பி
க்ருஷ்ணனை தொலைத்துவிடாதே!
ராசிக்கல்லை வைத்துக்கொண்டு
எல்லாம் கிடைக்குமென்று
கனவு காணாதே !
உன் ஜாதகத்தைக் கணித்துவிட்டு
வாழ்க்கையை முடிவு செய்யாதே!
உன் பெயரை மாற்றினால்
எல்லாம் மாறுமென்று நினைக்காதே !
உன் ராசி பலனை அறிந்துகொள்ளாதே!
உன்னிடம் என்ன இல்லை?
உன்னிடம் எல்லா நல்லவைகளும்
நீக்கமற நிறைந்து உள்ளது !
அதை புரிந்து கொள் !
நீ அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட
நாயகன் க்ருஷ்ணனுக்கும்,
அன்பு வடிவான ராதிகாவுக்கும்
பிடித்த செல்லக் குழந்தை!
அவர்களைத் தவிர வேறு
யார் உன்னை நன்றாக
அறிவார்கள் !
"ராதேக்ருஷ்ணா"
இந்த மந்திரம் போதும் !
உன் வாழ்க்கை நிம்மதியாக நடக்கும்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக