இல்லை ! இல்லை ! இல்லை !
ராதேக்ருஷ்ணா
முயல்பவன் தோற்பதில்லை . . .
ஏமாற்றுபவன் ஜெயித்ததில்லை . . .
பொய்யன் நிம்மதியடைவதில்லை . . .
பயந்தவன் சாதிப்பதில்லை . . .
சோம்பேறி உருப்பட்டதில்லை . . .
நல்லவன் வீழ்வதில்லை . . .
கெட்டவன் வாழ்வதில்லை . . .
நன்றி மறந்தவர் மனிதரில்லை . . .
உதவுபவன் முட்டாளில்லை . . .
பொறுமைசாலி வீண்போவதில்லை . . .
உழைப்பவன் தலை குனிவதில்லை . . .
இன்னும் உண்டு . . .
முடியவில்லை . . .
வாழ்க்கைக்கு முடிவில்லை . . .
கருணைக்கு எல்லையில்லை . . .
அன்பிற்கு அழிவில்லை . . .
ஆனந்தத்திற்கு விலையில்லை . . .
துன்பத்திற்கு பலமில்லை . . .
பக்திக்கு பலவீனமில்லை . . .
பக்தருக்கு சோர்வில்லை . . .
வாழ்ந்து பார்ப்போம் ! ! !
வாழ்க்கைக்கு முடிவில்லை . . .
கருணைக்கு எல்லையில்லை . . .
அன்பிற்கு அழிவில்லை . . .
ஆனந்தத்திற்கு விலையில்லை . . .
துன்பத்திற்கு பலமில்லை . . .
பக்திக்கு பலவீனமில்லை . . .
பக்தருக்கு சோர்வில்லை . . .
வாழ்ந்து பார்ப்போம் ! ! !
வீழ்ச்சி இனியில்லை . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக