ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

குழந்தையாயிரு ! ! !

ராதேக்ருஷ்ணா
 
குழந்தையாயிரு ! ! !
எல்லா கவலைகளையும்
தூர எறிந்துவிட்டு
குழந்தையாயிரு ! ! !
 
எல்லா பயங்களையும்
வீசி எறிந்துவிட்டு
குழந்தையாயிரு ! ! !
 
எல்லா குழப்பங்களையும்
குப்பைத்தொட்டியில் கொட்டிவிட்டு
குழந்தையாயிரு ! ! !
 
எல்லா எதிர்பார்ப்புகளையும்
சாக்கடையில் போட்டுவிட்டு
குழந்தையாயிரு ! ! !
 
எல்லா தோல்விகளையும்
தீயிட்டுக் கொளுத்திவிட்டு
குழந்தையாயிரு ! ! !
 
எல்லா ஏமாற்றங்களையும்
குழி தோண்டி புதைத்துவிட்டு
குழந்தையாயிரு ! ! !
 
எல்லா மனக்காயங்களையும்
துடைப்பத்தால் பெருக்கி,
வெளியில் கொட்டிவிட்டு
குழந்தையாயிரு ! ! !
 
எல்லா சந்தேகங்களையும்
மூட்டை கட்டி துர எறிந்துவிட்டு
குழந்தையாயிரு ! ! !
 
எல்லா திட்டங்களையும்
ஒட்டு மொத்தமாய்
தொலைத்துவிட்டு
குழந்தையாயிரு ! ! !
 
நீ என்றுமே குழந்தைதான் ! ! !
இதில் மாற்றமில்லை ! ! !

உன் உடலுக்குத்தான் வயதாகியிருக்கிறது !
உன் உள்ளத்துக்கு வயசே கிடையாது !

இந்தப் புத்தாண்டில்
குழந்தை போல் குதூகலமாயிரு ! ! !

வாழ்க்கை சுகமாக இருக்கும் ! ! !
 
 குழந்தை அம்மாவை நம்பி
இருப்பதுபோல்,
நீ க்ருஷ்ணனை நம்பியிரு ! ! !
 
மற்றதெல்லாம் தானாக நடக்கும் ! ! !
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP