கவலையில்லை !
ராதேக்ருஷ்ணா
உலகம் என்னை அவமதித்தாலும்
எனக்குக் கவலையில்லை !
உலகம் என்னை ஒதுக்கித் தள்ளினாலும்
எனக்குக் கவலையில்லை !
உலகம் என்னை அடித்தாலும்
எனக்குக் கவலையில்லை !
உலகம் என்னை வெறுத்தாலும்
எனக்குக் கவலையில்லை !
உலகம் எனக்கு எதுவுமே
தரவில்லைஎன்றாலும்
எனக்குக் கவலையில்லை !
உலகம் என்னுடைய எல்லாவற்றையும்
பிடுங்கிகொண்டாலும்
எனக்குக் கவலையில்லை !
உலகம் என்னை மனிதனாக
ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும்
எனக்குக் கவலையில்லை !
உலகம் என்னை புழுவாக
நினைத்தாலும்
எனக்குக் கவலையில்லை !
உலகம் என்னை மறந்தேபோனாலும்
எனக்குக் கவலையில்லை !
எனக்குக் கவலையில்லை !
எனக்கு எதைப் பற்றியும் கவலையில்லை !
துளி கூட கவலையேயில்லை !
என்னோடு என்றும்
என் கிருஷ்ணன் இருக்க
எனக்கு என்ன கவலை ? ! !
என்னோடு எல்லா சமயத்திலும்
என் கிருஷ்ணன் இருக்க
எனக்கு எதற்கு கவலை ? ! !
என்னோடு எல்லா இடத்திலும்
என் கிருஷ்ணன் இருக்க
எனக்கு கவலை உண்டோ ? ! !
என்னிடத்தில் கவலை வந்தால்
சத்தியமாக கவலை செத்துவிடும் ! ! !
என்னிடம் கவலை வந்தால்
கவலைக்கு கவலை வந்துவிடும் ! ! !
என்னிடம் கவலை மறந்தும்
நெருங்கமுடியாது !
என்னிடம் கவலை நெருங்க
என் கிருஷ்ணன் சம்மதிக்கமாட்டான் ! ! !
என்னிடம் கவலை ஒரு நாளும்,
எந்த ஒரு ஜன்மாவிலும் நிச்சயம்
நெருங்கவே முடியவே முடியாது ! ! !
ஐயோ ! கவலையே !
நான் இருக்கும் திசைப்பக்கம் கூட
தலை வைத்து படுத்துவிடாதே !
உன் நன்மைக்காக சொல்கிறேன் !
கவலையே !
சீக்கிரம் ஓடிவிடு !
என் கண்ணன் உன்னைக் கொல்ல
வேகமாய் வருகிறான் !
நீ வழி தவறி என்னிடம் வந்துவிட்டாய் !
சீக்கிரம் தப்பித்து ஓடிவிடு !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக