நன்றாக வாழ்வோம் !
ராதேக்ருஷ்ணா
யாரும் நம்மைக்
கெடுக்கமுடியாது !
நாம் ஜாக்கிரதையாக
இருக்கும் வரை !
யாரும் நம்மை
அவமானப்படுத்தமுடியாது !
நாம் அவமானத்தை
கொண்டாடாதவரை !
யாரும் நம்மை
ஒதுக்கிவைக்கமுடியாது !
நாம் கடவுளின் குழந்தை
என்னும் நினைவிருக்கும்வரை !
யாரும் நம்முடைய
சொத்தை கொள்ளையடிக்கமுடியாது !
நம்முடையதெல்லாம்
க்ருஷ்ணனுடையது
என்று நாம் வைத்திருக்கும்வரை !
எவருமே நம்மை
ஏமாற்றமுடியாது !
நம் வாழ்க்கையின் பொறுப்பை
நாம் க்ருஷ்ணனிடம்
ஒப்படைத்திருக்கும்வரை !
யாராலும் நம்மை
அழிக்கமுடியாது !
நாம் உடலல்ல ஆத்மா,
என்னும் சிந்தனையிருக்கும்வரை !
எதிலும் நாம்
தோற்கவேமுடியாது !
நம் வாயில் க்ருஷ்ண
நாம ஜபம் உள்ளவரை !
எந்த நிலையிலும்
நாம் வீழமாட்டோம் !
நாம் குருவிடம்
திடமான நம்பிக்கை
கொண்டிருக்கும்வரை !
நிச்சயம் நன்றாக வாழ்வோம் !
வாழ்வை க்ருஷ்ணப் பிரசாதமாக
நாம் வைத்திருக்கும்வரை !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக