ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 11 ஜூலை, 2011

க்ருஷ்ணனின் அவதாரம் . . .

ராதேக்ருஷ்ணா

எங்கே போய்விடும் காலம் . . .

இழந்த காலத்தைப் பற்றி
நான் கவலைப்படப்போவதில்லை !

எதிர் காலத்தைப் பற்றி
நான் கனவு காணப் போவதில்லை !

என்னிடம் இருப்பதோ
என் வாழ்வின் இந்த நிகழ் காலம் !

இது மட்டுமே சத்தியம் . . .

இதை நான் அவமதித்தால்
இல்லை எனக்கு எதிர்காலம் . . .

கடவுளின் ஆசிர்வாதம் நிகழ்காலம் !

கடவுளின் அருள் நிகழ்காலம் !

கடவுளின் வரம் நிகழ்காலம் !

அத்ருஷ்டத்தின் உண்மையான
அர்த்தம் நிகழ்காலம் !

வாய்ப்புகளின் சங்கமம்
நிகழ்காலம் !

எதிர்காலத்தின் அஸ்திவாரம்
நிகழ்காலம் !

இறந்தகாலம் என்னைப்
பரிகசிக்கிறது . . .

எதிர்காலம் என்னைப்
பயமுறுத்துகிறது . . .

நிகழ்காலம் என்னை
வரவேற்கிறது . . .

அதனால் நிகழ்காலமே
என்னுடைய தேர்வு . . .

க்ருஷ்ணன் எனக்குச்
சொல்லிக்கொடுத்த ரஹஸ்யம். . .
நிகழ்காலத்தில் இரு . . .

நீயும் இருந்து பார் . . .

மனிதர் சில சமயத்தில்
கடந்தகாலத்தில் இருக்கின்றனர் . . .

மனிதர் சில சமயத்தில்
எதிர்காலத்தில் இருக்கின்றனர் . . .

ஆழ்ந்த தூக்கத்தில்தான்
நிகழ்காலத்தில் இருக்கின்றனர் . . .

நிகழ்காலத்தில் இருப்பவருக்கு
ஒரு நாளும் தோல்வியில்லை . . .

நிகழ்காலத்தில் இருப்பவருக்கு
வாழ்வில் பிரச்சனையில்லை . . .

நிகழ்காலத்தில் இருப்பவருக்கு
உலகமே வசப்படும் . . .

நிகழ்காலமே ! நீயே என் பலம் . . .
நிகழ்காலமே ! நீயே என் வெற்றி . . .
நிகழ்காலமே ! நீயே என் வாழ்க்கை . . .

நிகழ்காலம் க்ருஷ்ணனின் அவதாரம் . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP