வந்தோமய்யா !
ராதேக்ருஷ்ணா
திருமலைக்கு வந்தோமய்யா !
திருவருள் கிடைத்தய்யா . . .
திருப்பதிக்கு வந்தோமய்யா !
உன் தரிசனம் தந்தாயய்யா . . .
திடீரென வந்தோமய்யா !
திக்குமுக்காட வைத்தாயய்யா . . .
திமிரோடு வந்தோமய்யா !
திருந்தி திரும்பினோமய்யா . . .
காமத்தோடு வந்தோமய்யா !
ப்ரேமையைத் கொடுத்தாயய்யா . . .
சுயநலத்தோடு வந்தோமய்யா !
சுத்தமாக்கி சரிசெய்தாயய்யா . . .
நோயோடு வந்தோமய்யா !
ஆரோக்கியத்தை அளித்தாயய்யா . . .
கவலையோடு வந்தோமய்யா !
ஆனந்தத்தை பொழிந்தாயய்யா . . .
பயத்துடன் வந்தோமய்யா !
அபயமளித்து ஆட்கொண்டாயய்யா . . .
சந்தேகத்தோடு வந்தோமய்யா !
சமாதானம் செய்தாயய்யா . . .
மிருகமாய் வந்தோமய்யா !
மனிதராய் மாற்றினாயய்யா . . .
பாரத்தோடு வந்தோமய்யா !
பாசத்தோடு பார்த்தாயய்யா . . .
பசியோடு வந்தோமய்யா !
ப்ரசாதம் ஊட்டினாயய்யா . . .
களைத்து வந்தோமய்யா !
பலத்தோடு திரும்பினோமய்யா . . .
நம்பி வந்தோமய்யா !
வீண்போகாதபடி காத்தாயய்யா . . .
ஏழுமலைக்கு வந்தோமய்யா !
வாழ்வில் விளக்கேற்றினாயய்யா . . .
ஒன்றும் நாங்கள் தரவில்லையய்யா !
நீயும் எங்களை ஒதுக்கவில்லையய்யா . . .
மலையப்பா . . .ராஜா. . .கலியுக தெய்வமே !
உனக்குச் சமம் உலகில் இல்லையய்யா . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக