ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 நவம்பர், 2011

எழுதியே தீருவேன் . . .

ராதேக்ருஷ்ணா
இத்தனை நாள்
ஏன் ஆனந்தவேதம்
எழுதவில்லை . . .

பெருமைக்காக
எழுதவில்லை . . .
அதனால் இதுவரை
எழுதவில்லை . . .



எழுதித்தான் ஆகவேண்டுமென்ற
கட்டாயமில்லை . . .
அதனால் இதுவரை
எழுதவில்லை . . .



என் எழுத்தினால் யாரையும்
வசப்படுத்தவேண்டிய அவசியமில்லை . . .
அதனால் இதுவரை
எழுதவில்லை . . .



சில நாள் தினமும்
எழுதினேன் . . .
என் கண்ணன் சொன்னான் . . .
எழுதினேன் . . .



பல நாள் எழுதவில்லை . . .
என் கண்ணன் எனக்காக மட்டுமே
சொன்னான் . . .
அதனால் எழுதவில்லை . . .



இன்று எழுதச் சொல்கிறான் . . .
எழுதுகிறேன் . . .



பக்தி என்பதும்,பகவான் என்பதும்
உலகில் நம்மை நிரூபிக்க இல்லை . . .



என் பக்தி எனக்காக . . .
என் கண்ணன் எனக்காக . . .



உலகில் நான் பக்தன்
என்று என்னை நிரூபிக்க
எனக்கு அவசியமில்லை . . .



ஏன் ! உனக்கும் கூடத்தான் . . .

நான் என் கண்ணனை
அனுபவிக்கவேண்டும் . . .

நீ உன் கண்ணனை
அனுபவிக்கவேண்டும் . . .



நாம் உலகிற்க்காக
இதைச் செய்தால்
பக்தி வியபசாரம் ஆகிவிடும் . . .



யாரையும் திருப்திபடுத்த
நாம் பக்தி செய்யவேண்டாம் . . .



நாம் நம்மை புரிந்துகொள்ளவும்,
கண்ணனை அனுபவிக்கவுமே
பக்தி . . .



பக்தி நிர்பந்தமல்ல . . .
பக்தி வெளிவேஷமல்ல . . .
பக்தி கட்டாயமல்ல . . .



மீரா தனக்குத் தோன்றும்போதே
பாடல்கள் பாடினாள் . . .



தியாகராஜர் தான் ராமனை
அனுபவிக்கும்போதே
பாடல்கள் எழுதினார் . . .



அதுபோல் என் மனதில்
கண்ணன் தூண்டும்போதே
நானும் ஆனந்தவேதம்
எழுதுகிறேன் . . .


நீ என்ன பெரிய மீராவா ?
நீ என்ன உயர்ந்த தியாகராஜரா ?
என்று நீ நினைக்கலாம் . . .


அதுபற்றி எனக்குத் தெரியாது . . .
தெரிந்து நான் என்ன செய்யப் போகிறேன் ?


எனக்குத் தெரிந்தது ஒன்றுதான் . . .


நான் க்ருஷ்ணனின் குழந்தை . . .
இந்த நினைவு எனக்குப் போதும் . . .



இது அஹம்பாவமல்ல . . .
சத்தியம் . . .

கண்ணன் எழுதச் சொல்லும் வரை
எழுதியே தீருவேன் . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP