வேட்டையாடத் தயார் . . .
ராதேக்ருஷ்ணா
வேட்டைக்கு தயார் . . .
என் பத்மநாபன்
வேட்டைக்குத் தயாராகிவிட்டான் !
கெட்டவர்களின் பாவத்தை
வேட்டையாடத் தயார் . . .
பக்தர்களின் கஷ்டங்களை
வேட்டையாடத் தயார் . . .
ஏழைகளின் தரித்திரத்தை
வேட்டையாடத் தயார் . . .
பணக்காரர்களின் அஹம்பாவத்தை
வேட்டையாடத் தயார் . . .
பதவியிலிருப்பவரின் சுயநலத்தை
வேட்டையாடத் தயார் . . .
தற்பெருமையாளர்களின் பெருமையை
வேட்டையாடத் தயார் . . .
கயவர்களின் கயமையை
வேட்டையாடத் தயார் . . .
தேசத்துரோகிகளின் துரோகத்தை
வேட்டையாடத் தயார் . . .
பயந்தாங்கொள்ளிகளின் பயத்தை
வேட்டையாடத் தயார் . . .
அறிவிலிகளின் அஞ்ஞானத்தை
வேட்டையாடத் தயார் . . .
வேட்டையாடப் போகிறான் . . .
விளையாடப் போகிறான் . . .
இதோ கிளம்பிவிட்டான் . . .
என் அனந்தபத்மநாபன் . . .
திருவனந்தபுரத்தில் . . .
உலகைக் காக்க ஒரு வேட்டை . . .
உன்னதமான ஒரு வேட்டை . . .
உத்தமனின் வேட்டை . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக