ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 29 நவம்பர், 2011

மதிப்பதிகம் . . .

ராதேக்ருஷ்ணா


ரோஜாச்செடியில்
மலர்கள் கொஞ்சம் தான் . . .
முட்கள்தான் அதிகம் ! ! !

அதனால் தான் ரோஜாப்பூவிற்கு
மதிப்பதிகம் . . .


பாலைவனத்தில்
தண்ணீர் கொஞ்சம் தான் . . .
மணல் தான் அதிகம் ! ! !

அதனால் தான் அங்கே தண்ணீருக்கு
மதிப்பதிகம் . . .


நல்லவர்கள்
இந்த உலகில் கொஞ்சம் தான் . . .
கெட்டவர்களே அதிகம் ! ! !

அதனால் தான் இங்கே
நல்லவர்களுக்கு மதிப்பதிகம் . . .


வாழ்க்கையில்
வெற்றிகள் குறைவு தான் . . .
போராட்டங்கள் அதிகம்தான் . . .

அதனால் தான் வாழ்வில்
வெற்றிக்கு மதிப்பதிகம் ! ! !


நீ வெற்றி பெறுவாய் . . .
நீ நிம்மதி அடைவாய் . . .
நீ கோடியில் ஒரு அற்புத ஜீவன் . . .

அதனால் க்ருஷ்ணனுக்கு
உன் மேல் என்றுமே
மதிப்பதிகம் . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP