என்னை மறப்பாயா ? ? ?
ராதேக்ருஷ்ணா
க்ருஷ்ணா . . .
தூங்கும் போது
நான் உன்னை நினைப்பதில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ?
க்ருஷ்ணா . . .
மகிழ்ச்சியில் நான்
திளைத்திருக்கும்போது உன்னை
நினைப்பதேயில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ?
க்ருஷ்ணா . . .
காமத்தில் மயங்கிக்கிடக்கையில்
நான் உன்னை நினைப்பதில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ?
க்ருஷ்ணா . . .
கோபத்தில் புத்தியிழக்கும் போது
நான் உன்னை நினைப்பதில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ?
க்ருஷ்ணா . . .
உலகம் என்னைப் புகழும்போது
நான் உன்னை நினைப்பதில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ?
க்ருஷ்ணா . . .
நான் அஹம்பாவத்தில் இருக்கும்போது
உன்னை துளி கூட நினைப்பதில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ?
க்ருஷ்ணா . . .
நான் ஆசையில் உழலும்போதும்
உன்னை மறந்தும் நினைப்பதில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ?
க்ருஷ்ணா . . .
என் பிரச்சனைகள் தீர்ந்தபின்
உன்னை நான் நினைப்பதேயில்லை !
அப்பொழுது நீ என்னை மறப்பாயா ? ? ?
எனக்குத் தெரியாது க்ருஷ்ணா . . .
நான் உன்னை ஒழுங்காக
நினைக்கிறேனா இல்லையா
என்று எனக்குப் புரியவில்லை . . .
ஆனால் நீ சொல் . . .
என்னை மறப்பாயா ? ? ?
இல்லை . . . இல்லை . . .
நீ என்னை மறப்பதேயில்லை . . .
நானே உன்னை மறந்தாலும்
நீ என்னை மறக்கவேமாட்டாய் . . .
அதனால் தானே நான்
இங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறேன் . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக