ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 ஜனவரி, 2012

என்னைப் பார்த்து . . .

ராதேக்ருஷ்ணா

என்னைப் பார்த்து ஒருவர் சொன்னார் . . .
"நீ வாழ்வில் முன்னேறமாட்டாய் "
 .....

நான் பதில் சொன்னேன் . . .
"மிகவும் சந்தோஷம்!
அதனால் நிச்சயம் க்ருஷ்ணன்
என்னைக் காப்பாற்றுவான் "


என்னைப் பார்த்து ஒருவர் சொன்னார் . . .
"உனக்கு அறிவே கிடையாது"
.....

நான் பதில் சொன்னேன் . . .
"மிகவும் நல்லது !
அதனால் க்ருஷ்ணன்
என் கூடவே இருப்பான் "


என்னைப் பார்த்து ஒருவர் சொன்னார் . . .
" நீ ஒரு கோழை"
.....

நான் பதில் சொன்னேன் . . .
"ஆஹா...ரொம்ப சந்தோஷம் !
அதனால் க்ருஷ்ணன் என்னை விட்டு
ஒருபோதும் விலகவே மாட்டான் "

உலகம் என்னைப் பார்த்து
எதையாவது சொல்லும் . . .

நானும் அதற்கு ஏதேனும்
பதில் சொல்வேன் . . .

என் பதில் உலகத்திற்கு புரிந்ததா
இல்லையா எனக்குத் தெரியாது !
எனக்கு அந்தக் கவலையுமில்லை !

என் க்ருஷ்ணனின் அருள்
என்னோடு என்றுமிருக்கிறது . . .
என் க்ருஷ்ணன் என்றும்
என்னைக் காப்பாற்றுகிறான் . . .
என் க்ருஷ்ணன் என்னை
எப்பொழுதும் நேசிக்கிறான் . . .
என் க்ருஷ்ணன் என்னை
ஒரு நாளும் கைவிடமாட்டான் . . .

இதுவே நான் புரிந்துகொண்டது . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP