ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 ஜனவரி, 2012

நீயில்லாமல் நானில்லை . . .

ராதேக்ருஷ்ணா 


என்னை நான் தேடுகிறேன் !


காமத்தில் மூழ்கிவிட்ட
என்னைத் தேடுகிறேன் !

கோபத்தில் மாட்டிக்கொண்ட
என்னைத் தேடுகிறேன் !

பயத்தில் ஒளிந்துகொண்டிருக்கும்
என்னைத் தேடுகிறேன் !

அஹம்பாவத்தில் சிக்கிகொண்டிருக்கும் 
என்னைத் தேடுகிறேன் !

சுயநலத்தில் சுழன்றுகொண்டிருக்கும்
என்னைத் தேடுகிறேன் !

குழப்பத்தில் கரைந்துவிட்ட
என்னைத் தேடுகிறேன் !

திடீரென நான் எனக்கு
கிடைக்கிறேன் . . .

பல சமயங்களில் நான்
எனக்குக் கிடைப்பதில்லை . . .

சில சமயங்களில் நான்
எனக்கு ரொம்ப அழகாகக் கிடைக்கிறேன் !

அந்த சில சமயங்கள்
நான் நாமத்தை ஜபிக்கும் நேரங்கள் . . .

கிருஷ்ணனின் நாமத்தை
நா ஜபித்தால் நான் எனக்குக்
கிடைக்கிறேன் . . .

கிருஷ்ணனின் நாமத்தை
நான் மறந்தால் என்னை
நான் தேடவேண்டி உள்ளது . . .

எவ்வளவு தேடினாலும்
நான் எனக்குக் கிடைப்பதில்லை . . .

திரும்பவும் நா நாமத்தை
ஜபித்தால் கிடைக்கிறேன் . . .

என்ன அதிசயம் இது . . .

நான் எனக்குக் கிடைக்கும்போது
எத்தனை சந்தோஷம் . . .

நான் என்னைத் தேடும்போது
எத்தனை துக்கம் . . .

கிருஷ்ணா . . .
ஒன்று தெளிவாய் புரிந்தது . . .

நீயில்லாமல் நானில்லை . . .

நீயில்லாத நான் கொடுமை . . .

நீயில்லாத நான் அசிங்கம் . . .

நீயில்லாத நான் கேவலம் . . .

நீயில்லாத நான் பயங்கரம் . . .

நீயில்லாத நான் அழுக்கு . . .

நீயில்லாமல் நான் நானில்லை . . .

நீயில்லாத நான் தேவையில்லை . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP