ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 28 ஜனவரி, 2012

வீட்டை காலி செய் . . .

ராதேக்ருஷ்ணா

வீடு . . .
வீட்டை காலி செய் . . .

எத்தனை வீட்டை காலி செய்வது  ?

முதலில் ஒரு அற்புதமான
வீட்டில் நிம்மதியாய் இருந்தேன் . . .
ஏனோ அதை விட்டேன் !
நான் செய்த பெரிய தவறு ! ! !


பிறகு ஒரு சிறிய வீடு
கிடைத்தது . . .
சுகமாய் இருந்தது !
சில பலசாலிகள்
என்னைப் பாடாய் படுத்தினர் !
வீட்டைக் காலி செய் என்று
என்னை துரத்திவிட்டனர் . . .
அதனால் அந்த வீட்டைக்
காலி செய்தேன் . . .

வேறு ஒரு வீட்டிற்குச்
சென்றேன் . . .
சுற்றிலும் சாக்கடை !
இருப்பினும் எனக்கு மிகவும்
பிடித்திருந்தது . . .
நன்றாக இருந்தேன் . . .
வியாதிகள் என்னை
வீட்டை காலி செய் என்றது . . .
 வேறு வழியில்லாமல்
காலி செய்தேன் . . .


மீண்டும் ஒரு வீட்டிற்கு
மாறினேன் . . .
மரத்தின் மேல் வாழ்க்கை !
ஆகாயமே வழி . . .
வீட்டை காலி செய் என்று
மரணம் எனக்கு உத்தரவிட்டது !
அழுதேன். . .கெஞ்சினேன் . . .
ஒரு பிரயோஜனமுமில்லை . . .
அந்த வீட்டையும் காலி செய்தேன் !


பிறகு காட்டிலே ஒரு வீடு
கிடைத்தது !
ஒவ்வொரு நாளும்
போராட்டம் . . .
இருந்தாலும் பந்துக்களுடன்
ஆனந்தமாய் இருந்தேன் !
பந்துக்களுடன் சண்டை . . .
என்னை அவர்களே
வீட்டை விட்டுத் துரத்தினர் . . .
நொந்துபோய் அந்த வீட்டை
விட்டு வெளியேறினேன் !


இந்த தொந்தரவே வேண்டாம்
என்று ஒரே இடத்தில்
இருக்கும்படியாக,பச்சை
வண்ண வீட்டில் நான்
தனியே வாழ்ந்தேன் . . .
இயற்கையின் வேகத்தில்
என் வீடு காணாமல் போனது . . .
நானும் வீட்டைக் காலி செய்தேன் !




இப்படியே பல வீடுகளைக்
காலி செய்துவிட்டேன் !
நொந்துபோனது தான் மிச்சம் !


எந்த வீடும் நிரந்தரமில்லை . . .
பட்டபிறகே புரிந்தது . . .



மீண்டும் என் பழைய
வீட்டை அடைய நான்
தற்காலிகமாக ஒரு
வீட்டைத் தேடினேன் . . .


ஒரு நல்ல வீடு
கிடைத்திருக்கிறது . . .


இந்த வீட்டை என்னை
நம்பிக் கொடுத்தவர்
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் . . .

இந்த வீட்டிற்க்காக க்ருஷ்ணனிடம்
உத்திரவாதம் கொடுத்தது
சத்குரு . . .


இந்த வீட்டிற்க்கான வாடகை
விடாது நாமஜபம் . . .


நிச்சயம் இந்த வீட்டில்
தங்கி என் பழைய வீட்டைக்
கண்டுபிடித்துவிடுவேன் . . .


என் பழைய வீட்டிற்க்கு
செல்வதற்க்காகவே
நான் இந்த வீட்டில்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன் . . .


சீக்கிரம் என் பழைய வீட்டை
நான் அடையவேண்டும் . . .





0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP