நிரந்தர வீடு . . .
ராதேக்ருஷ்ணா
வீடு . . .
நான் சொன்ன வீடுகள் . . .
உனக்குப் புரிந்ததோ,
இல்லையோ . . .
நான் காலி செய்த வீடுகள் . . .
உனக்குத் தெரிந்ததுதான் . . .
நீயும் இது மாதிரி
நிறைய வீடுகளை
காலி செய்து விட்டாய் . . .
வீடு என்று சொன்னது
உடலை . . .
முதலில் நான் இருந்த வீடு
க்ருஷ்ணனோடு
பரமானந்தம் என்னும் வீடு !
அதைத் தான் விட்டுவிட்டேன் . . .
பிறகு நான் அடைந்த வீடு
ஒரு பூச்சியின் உடல் . . .
பல்லி போன்ற பெரிய
ஜந்துக்களுக்கு உணவாக
ஆனதால் அதை காலி செய்தேன் !
அடுத்ததாக நான் அடைந்த வீடு
பன்றியின் சரீரம் . . .
சாக்கடையில் வாழ்க்கை . . .
நோயினால் அந்த வீட்டை
நான் காலி செய்தேன் !
அடுத்து நான் அடைந்த வீடு
பறவையின் சரீரம் . . .
நிச்சயம் மரணம் எல்லா
உடலுக்கும் உண்டு . . .
அதனால் பறவை உடலை
விட்டு காலி செய்தேன் !
அதன்பிறகு எனக்கு
மிருக உடல் கிடைத்தது . . .
மிருகங்களுக்குள்ளே
சண்டையினால் அந்த உடலை
விட்டு காலி செய்தேன் !
இப்படியாகச் சுற்றி அலைந்த நான்
மரமாக,செடியாக,கொடியாக
ஆசைப்பட்டு அதுவாக ஆனேன் !
இயற்கையின் வேகத்தில்
அந்த உடலும் நஷ்டம் ஆனது !
இப்படி பல உடல் என்னும்
வீட்டில் வாழ்ந்து இறந்து
சுற்றிக்கொண்டிருந்தேன் ! ! !
க்ருஷ்ணன் தன் கருணையினால்
என்னை மனித உடலில்
வாழ வாய்ப்பு தந்தான் !
இந்த மனித உடல் குருவின்
ப்ரசாதத்தால் எனக்குக் கிடைத்தது !
நாமஜபம் விடாது சொன்னால்
நிச்சயம் நான் பரமானந்தம்
என்னும் என் பழைய வீட்டை
சீக்கிரம் அடைந்து விடுவேன் . . .
இதுவே நான் சொன்ன
வீட்டை காலி செய் . . .
இப்பொழுது புரிந்ததா . . .
நீயும் நானும் ஆத்மா . . .
நாம் பல பல உடல்களில்
சுற்றிக்கொண்டிருந்தோம் . . .
இன்று இங்கே மனிதராய்
வாழ்கிறோம் . . .
சீக்கிரம் நாம் பரமானந்தம்
என்னும் பழைய வீட்டை
அடைந்தாகவேண்டும் . . .
அதுவே நம் நிரந்தர வீடு . . .
அதுவே நிம்மதியான வீடு . . .
முழித்துக்கொள் . . .
ஆயத்தப்படுத்திக்கொள் . . .
அடைந்தே தீருவோம் . . .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக