வைகுண்ட ஏகாதசி !
ராதேக்ருஷ்ணா
வைகுண்ட ஏகாதசி . . .
கண்ணன் விழிக்கும் ஏகாதசி !
கர்ம வினைகள் அழியும் ஏகாதசி !
வைகுண்டம் தரும் ஏகாதசி !
விண்ணவரும் தொழும் ஏகாதசி !
சொர்க்க வாசல் திறக்கும் ஏகாதசி !
மனிதரை தேவராக்கும் ஏகாதசி !
மண்ணவரை விண்ணவர் கொண்டாடும் ஏகாதசி !
விண்ணவரோடு நாமும் கண்ணன் கழலிணை
பணிவோம் !
கண்ணனின் ஆசைப்படி நடப்போம் !
கண்ணன் சொன்னபடி செய்வோம் !
கண்ணனோடு இருப்போம் !
கண்ணனோடு வாழ்வோம் !
பிறவிப் பயனை அடைவோம் !
முடிந்தால் விரதம் இருப்போம் !
உடல் முடியும்வரை நாமம் ஜபிப்போம் !
இயன்றால் இரவெல்லாம் விழித்திருப்போம் !
இறக்கும் வரை கண்ணனை நினைத்திருப்போம் !
கண்ணா . . .
நாங்களெல்லாம் தேகத்தையே
ஆத்மாவாகக் கொண்டாடும் மூடர்கள் !
ஆயினும் உன் பிள்ளைகள் !
அதனால் எங்களிடமிருந்து
விரதம், விழிப்பு இதையெல்லாம்
எதிர்பார்க்காதே !
எம்மால் முடிந்தது உன்னைச்
சரணடைவது மட்டுமே !
உன்னைச் சரணடைந்தோம் !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக