என் அருமைக் குழந்தையே ! ! !
ராதேக்ருஷ்ணா
வருவார் . . . இருப்பார் . . . செல்வார் !
மனிதர்கள் திடீரென்று வருவார் !
தேவையென்றால் இருப்பார் !
காரியம் முடிந்தவுடன் செல்வார் !
அதனால் மனிதர்கள்
வந்துவிட்டாரென்று சந்தோஷப்படாதே !
உன்னோடு இருக்கிறார்கள்
என்று அஹம்பாவப்படாதே !
திடீரென்று உன்னை விட்டுச்
சென்றுவிட்டால் வருத்தப்படாதே !
மறவார் . . . இருப்பார் . . . செய்வார் !
க்ருஷ்ணன் ஒரு நாளும் மறவார் !
நம்மோடு என்றுமே இருப்பார் !
எப்பொழுதும் நமக்கு நன்மையே செய்வார் !
அதனால் க்ருஷ்ணனை
ஒரு நாளும் மறவாதே !
எப்பொழுதும் க்ருஷ்ணன் இருப்பதால்
எதற்கும் அஞ்சாதே !
உனக்கு நன்மையே நடப்பதால்
ஒரு பொழுதும் புலம்பாதே !
சொல்வார் . . . திருத்துவார் . . . நடத்துவார் !
குரு நமக்கு நல்ல விஷயங்களைச் சொல்வார் !
குரு நம்மைத் திருத்துவார் !
குரு நம்மை நல் வழியில் நடத்துவார் !
அதனால் குரு சொல்லை
ஒரு பொழுதும் மீறாதே !
உன்னைத் திருத்தும்போது
மறந்தும் அதைத் தடுக்காதே !
குரு சொல்லும் வழியைத் தவிர
வேறு எதுவும் யோசிக்காதே !
உணர்வாய் . . . வாழ்வாய் . . .சுகிப்பாய் !
பக்தியை உணர்வாய் . . .
நாம ஜபத்தோடு வாழ்வாய் . . .
க்ருஷ்ணனோடு சுகிப்பாய் !
என் அருமைக் குழந்தையே . . .ீ சுகா
ீ அன்னந்தன்மாய் இருக்கவ
0 கருத்துகள்:
கருத்துரையிடுக